காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபர்: விபத்தில் மரணம்!

Published On:

| By Balaji

காட்டுப்பன்றியை வேட்டையாடி எடுத்துச் செல்லும்போது வன ஊழியர் துரத்தியதால் வேகமாகச் சென்ற வாலிபர் சாலை விபத்தில் பலியானார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் வனக்காவலராக இருப்பவர் லலித்குமார். நேற்று முன்தினம் (மே 18) இரவு சத்தியமங்கலம் பண்ணாரி பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் இவர் ரோந்து சென்றார். அப்போது, அங்கு ஒரு வாலிபர் காட்டுப்பன்றியை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச்செல்வதைப் பார்த்தார். அவரது பெயர் அரவிந்த். புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கணக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். அவரைத் தனது இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று பிடிக்க முயன்றார் லலித்குமார்.

இதனைக் கண்ட வாலிபர் மிகவேகமாக வாகனத்தைச் செலுத்தினார்.

சத்தியமங்கலம் ராஜன் நகர் அருகே சென்றபோது, சாலையோரத்தில் இருந்த பாலத்தில் அந்த வாலிபரின் வாகனம் மோதியது. அப்போது அவரது வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அதேநேரத்தில் லலித்குமாரின் வாகனமும், அந்த சாலையில் இருந்த வேறொரு பாலத்தில் மோதியது.

இந்த இரண்டு விபத்துகளில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவலை அறிந்த பவானிசாகர் போலீசார் அங்கு சென்றனர். இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அரவிந்த் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லலித்குமாருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

**

[வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/50)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share