காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள்: இன்று மாலை அறிவிப்பு!

public

திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லீம் லிக் மற்றும் மமக இடம்பெறுவது உறுதியாகிவிட்டாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளோடு நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்பது என கேட்டறிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி இருமுறை சந்தித்து தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது ராகுல் காந்தி 10 தொகுதிக்கு மேல் சென்றாலும் செல்லலாம், ஆனால் 10க்கும் குறையாமல் வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். அதனை அப்படியே கனிமொழி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளாராம்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 20) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். அகில இந்திய காங்கிரஸ் சார்பில் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோர் வந்து ஒப்பந்தத்தை இறுதி செய்யவுள்ளனர். தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது, அதனையும் தலைவர்கள் முறைப்படி அறிவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

புதுச்சேரியுடன் சேர்த்து காங்கிரஸுக்கு 10 இடங்கள் என்று கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “உங்களுக்கு சொல்லப்படுகிறது. இன்று மாலை முழுமையான அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *