கவிஞர் வரவர ராவுக்கு போலீஸ் காவல்!

public

பீமா கோரேகான் வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்றும் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டத்தில் ஈடுபட்டவர் என்றும் போலீசாரால் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த கவிஞர் வரவர ராவ், புனே போலீசாரால் நேற்று (நவம்பர் 17) நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற பீமா கோரேகான் வெடிகுண்டு வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர் என்றும் மாவோயிஸ்ட்டுகள் தொடர்பில் இருந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதில் ஈடுபட்டவர் என்றும் போலீசாரால் புனையப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கவிஞர் வரவர ராவ் கைது செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வீ்ட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இவருடன் சேர்த்து கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் பெராரியா மற்றும் வெனான் கன்சால்வ்ஸ் ஆகிய சமூகச் செயற்பாட்டாளர்களும் இதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 16) வரவர ராவ் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 79 நாட்களாக ஹைதராபாத்தில் அசோக் நகரிலுள்ள வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த வரவர ராவ்வை நேற்று நள்ளிரவில் புனே போலீசார் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக புனே போலீஸ் துணை ஆணையர் சிவாஜி பி.பவார் கூறுகையில், சாலை போக்குவரத்தின் மூலமாகவோ அல்லது விமானத்தின் மூலமாகவோ, வரவர ராவ் புனே கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 18) ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0