கவர்ச்சியாக நடித்ததால் தடை விதிக்கப்பட்ட நடிகை!

Published On:

| By Balaji

கம்போடியாவை சேர்ந்த நடிகை டேனி குவான். இவருக்கு வயது 24. இவரை சமீபத்தில் கம்போடியா நாட்டு கலாச்சாரம் மற்றும் கலைத்துறையை சேர்ந்த அமைச்சரகம் நேரில் அழைத்து பேசியுள்ளது. அவர் வரிசையாக நிறைய படங்களில் கவர்ச்சியாக நடித்ததாகவும், அவருடைய கவர்ச்சி கம்போடியாவின் கலாச்சாரத்தையும், கலையையும் அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதனால், அவரை ஒரு வருடம் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிப்பதாகவும் கூறியுள்ளது. பொதுவாகவே கம்போடியா நாட்டு படங்கள் கவர்ச்சியாக தான் எடுக்கப்படுகின்றன.

இதுகுறித்து டேனி குவான் கூறும்போது, என்னைவிட மற்ற நடிகைகள் அனைவரும் எல்லையில்லா கவர்ச்சியில் நடித்து வருகிறார்கள். அவர்களை ஒப்பிடுகையில் நான் ஒன்றும் பெரிதாக கவர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை என்னுடைய தோற்றம் அவர்களுக்கு அந்த மாதிரியான எண்ணத்தை தூண்டியிருக்கலாம். எனக்கு எப்படி உடையணிய வேண்டும் என்பது தெரியும். ஆனால், என்னுடைய கலாச்சாரமும், கம்போடியா மக்களும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று கூறியுள்ளார். கம்போடியாவின் கலாச்சாரம் மற்றும் கலைத்துறை அமைச்சரகம் தன்னை ஒரு மகளை அழைத்து அறிவுரை கூறுவதுபோல்தான் தன்னிடம் நடந்துகொண்டது என்றும் டேனி குவான் கூறியுள்ளார். கவர்ச்சியாக நடித்த காட்சிகளை தடை செய்வார்கள். ஆனால் நடிகையை நடிக்கக்கூடாது என ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel