கள்ளச்சாராய வேட்டை: பொதுமக்களைத் தாக்கிய போலீஸ்!

public

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பாலும் தமிழகத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், கள்ளச்சாராயமும், போலியான மது பாட்டில்களும் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள், சாராயம் போன்றவை அதிகளவில் புழக்கத்திலிருப்பதால், கள்ளச்சாராய வியாபாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 18ஆம் தேதி, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பி-க்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

அதையடுத்து, ஒவ்வொரு காவல் நிலைய போலீஸாரும் தங்கள் லிமிட்டில் இருக்கும் கள்ளச்சாராய வியாபாரிகளை வலைவீசித் தேடி வருகிறார்களாம். இந்நிலையில், பண்ருட்டி டி.எஸ்.பி. தலைமையிலான தனி டீம் போலீஸார் ஜூன் 18ஆம் தேதி டெம்போ டிராவலரில் சாராய வேட்டைக்குச் சென்றார்கள். திருவண்ணாமலை சாலையில் திரூவாமூர் கிராமத்து வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த இளைஞரிடம் மப்டியிலிருந்த போலீஸார், ‘கள்ளச்சாராயத்தை எங்கே விற்பனை செய்றாங்க?’ என்று கேட்க, அந்த இளைஞரோ, வந்தது போலீஸ் என்று தெரியாமல் அலட்சியமாகப் பதில் கூறியதையடுத்து, போலீஸிடமே மரியாதையில்லாமல் பேசுகிறாயா என்று கோபத்தில் அடித்து உதைத்த வேகத்தில் வேனில் புறப்பட்டார்கள்.

போலீஸார் அடித்த வலி தாங்கமுடியாமல், ஊருக்குள் சென்று தனது உறவினர்களிடம் தகவல் கூறியுள்ளார் இளையராஜா என்ற அந்த வாலிபர். அதன்பேரில், இளைஞனை அடித்த போலீஸ், வேனில் சென்றதை அறிந்த ஊர்மக்கள் ஒன்றுகூடி வேனை மறித்து அப்பாவி பையனை அடித்தது யார் என்று கேட்டு சத்தம்போட்டு வேனை தட்டியதும், வேனுக்குள் மப்டியிலிருந்த போலீஸார் பயந்துபோய், பொதுமக்கள் சுற்றி வளைத்துத் தாக்க முயற்சிக்கிறார்கள் என்று மேலிடத்துக்குத் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்கள்,

உடனடியாக, டி.எஸ்.பி. சுந்தரவடிவேல் பதற்றமாகி என்னவென்று விசாரிக்காமல் போலீஸ் படையுடன் கூட்டத்தினரை தாக்கியுள்ளார். அதில், ஊர் மக்கள் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அடிபட்டதும் மக்கள் கூட்டம் அதிகமானதால் வேறுவழியில்லாமல், மக்களிடம் சமாதானமாகியுள்ளார்கள் போலீஸார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0