தமிழக கல்வி நிறுவனங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதற்கு செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
மாணவர்கள் சேர்க்கை அதிகளவில் இல்லாததால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் 1500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்றி மூடப்படும் நிலைக்கு வந்திருக்கிறது. இதற்கு நேர்மாறாக 1.25 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசு நடத்தும் பள்ளிக் கூடங்களில் தரம் இல்லாத காரணத்தால் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர். தமிழக கல்வி நிறுவனங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் இன்று (ஜூலை 17) செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அரசின் திட்டங்களால் தங்கள் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் தற்போது முடிவெடுக்கிறார்கள். சில பள்ளிகளில் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஒப்புக்கொள்கிறோம். ஆனால், எதற்கெடுத்தால் வெள்ளை அறிக்கை கேட்பது சரியாக இருக்காது” என்று தெரிவித்தார்.
மேலும், “பள்ளிகளை சீர்படுத்தவும், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கூடுதலாக இருக்கிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்றும் குறிப்பிட்டார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரஸா – இ – இஸ்லாம் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”