நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் மறைந்த கலைஞரின் நினைவிடத்துக்குச் சென்று கண் கலங்கி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் தேனியில் ஓ.பன்னீர் மகன் ஓ.ரவீந்திரநாத்தை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றுபெற்றுள்ளார்கள். தொண்டர்களின் கூட்டத்துக்கு இடையே நேற்று அறிவாலயத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “கலைஞர் இல்லாமல் நாம் சந்தித்த இந்த முதல் தேர்தலில் அவருடைய அறிவுரைகளை பின்பற்றி வெற்றி கண்டிருக்கிறோம். இந்த வெற்றியை கலைஞருக்கு சமர்ப்பிக்கிறோம்” என்று கூறினார்.
பல வெற்றி வேட்பாளர்களும் சான்றிதழ் வாங்குவதற்கு நேற்று நள்ளிரவாகி விட்டதால், உடனடியாக புறப்பட்டு இன்று காலை சென்னை வந்துவிட்டனர். சென்னை, சென்னையை ஒட்டிய தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் இன்று காலை முதல் மெரினாவில் இருக்கும் கலைஞரின் நினைவிடத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இன்று கலைஞர் நினைவிடத்தில் உதயசூரியன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கலைஞர் நினைவிடத்தில் தங்கள் வெற்றிச் சான்றிதழை வைத்து வணங்கினர். தூத்துக்குடியில் இருந்து வெற்றிச் சான்றிதழோடு சென்னைவந்த கனிமொழி இன்று காலை தன் தாய் ராசாத்தி அம்மாள், கணவர் அரவிந்தன் ஆகியோரோடு மெரினாவில் இருக்கும் கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றார். அங்கே மலர் தூவி தன் தந்தைக்கு மலர் அஞ்சலி செலுத்திய கனிமொழியின் கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்த்தன.
இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வெற்றிச் சான்றிதழ்களை அவரிடம் காட்டி வாழ்த்து பெற்று வருகின்றனர் திமுக எம்.பி.க்கள்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!](https://minnambalam.com/k/2019/05/23/167)
**
.
**
[மோடிகளை உருவாக்கும் மோடி](https://minnambalam.com/k/2019/04/11/19)
**
.
.
�,”