மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக அதிக தொகுதிகளில் வென்ற நிலையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது.
கடந்த மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும், மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது. சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், இப்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை விட கூடுதலான இடங்களில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் உள்ள நகர்ப்புற அமைப்புக்கான 1,361 வார்டுகள், 8 முனிசிபல் கவுன்சில்கள், 33 டவுன் முனிசிபல் கவுன்சில்கள், 22 டவுன் பஞ்சாயத்துகளுக்கு மே 29ஆம் தேதி தேர்தல் நடந்தது.
இதில் 506 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 174 இடங்களில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், பாரதிய ஜனதா கட்சி 366 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 160 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும், சிபிஎம் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
கர்நாடக காங்கிரஸ் தலைவரான தினேஷ் குண்டு ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “முடிவுகள் வெளியான 1,221 இடங்களில் 509 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. சுமார் 42 விழுக்காடு இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கர்நாடக மக்கள் காங்கிரஸின் பக்கம் உள்ளார்கள் என்பதை இந்த முடிவுகள் காட்டுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது தோல்வியடைந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. இதுகுறித்து ஆய்வு தேவை” என்று கூறியுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: அதிமுகவுடன் இணைப்பா? ஆய்வுக் கூட்டத்தில் தினகரன்](https://minnambalam.com/k/2019/06/01/68)
**
.
**
[விமர்சனம்: என்ஜிகே](https://minnambalam.com/k/2019/06/01/10)
**
.
**
[மவுனம் கலைத்த ராகுல்](https://minnambalam.com/k/2019/06/01/62)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!](https://minnambalam.com/k/2019/05/31/66)
**
.
**
[ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!](https://minnambalam.com/k/2019/05/31/20)
**
.
.
�,”