?கமலைத் தவிர்த்த காரணம்!

Published On:

| By Balaji

‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வேலைகள் முடிந்ததும் ‘சபாஷ் நாயுடு’ படத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு கமல் அறிவித்திருந்த ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து, அரசியல் சார்ந்து ஆர்வம்காட்டி வருகிறார் கமல். இந்த நிலையில் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தின் மூலம் தன் கருத்துகளைப் பதிவு செய்வதற்காக இப்படத்தின் கதையை மெருகேற்றி வருவதாகவும், இப்படத்தை உதயநிதி தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இதுகுறித்து Behind Woods-க்கு உதயநிதி அளித்துள்ள பேட்டியில், “நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன். அவரைச் சந்தித்தபோது உங்களோடு ஒரு படம் இணைந்து பணிபுரிய வேண்டுமெனத் தெரிவித்தேன். அப்போது ‘தலைவன் இருக்கிறான்’ படம் குறித்து விளக்கினார். இது ஓர் அரசியல் சார்ந்த படம். அதனால் இப்படத்தைத் தயாரித்தால் பெரும் சர்ச்சைகளை உண்டுபண்ணும் என்று அப்படத்தைத் தயாரிக்க மறுத்து விட்டேன். அப்போது கே.எஸ்.ரவிக்குமார் சார் ‘தசாவதாரம்’ படத்தை முடித்திருந்தார். அவரிடம் ஒரு ஜாலியான நகைச்சுவை திரைப்படத்தை எடுக்கலாம், சர்ச்சைக்குரிய படங்களை பண்ண விருப்பமில்லை எனத் தெரிவித்தேன். அதன் காரணமாக உருவாகியதுதான் ‘மன்மதன் அம்பு’ திரைப்படம்” எனத் தெரிவித்துள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel