கத்திப்பாரா மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதியதில் போக்குவரத்து காவல் பிரிவு எஸ்.ஐ உயிரிழந்துள்ளார். கத்திப்பாரா மேம்பால வளைவுகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வந்த நிலையில், தற்போது ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் சானிடோரியம் துர்கா நகரில் வசித்து வந்தவர் நடராஜ். பரங்கிமலை போக்குவரத்து காவல் பிரிவில் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். தமிழகத்துக்குக் குடியரசுத் தலைவர் வருகையையொட்டி நந்தம்பாக்கத்தில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு சானிடோரியத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார் நடராஜ்.
கத்திப்பாரா மேம்பாலத்தில் பூந்தமல்லி வளைவில் சென்று கொண்டிருந்த அவருக்குப் பின்னால் சிமெண்ட் லாரி ஒன்று வந்துள்ளது. சாலையின் நடுவில் செல்லாமல் நடராஜ் இடதுபுறமாகச் சென்றுள்ளார். இதனால் பூந்தமல்லி வளைவில் லாரி வளையும் போது இடதுபுறமாக ஒட்டி சென்ற அவரின் பைக் மீது லாரி மோதியுள்ளது. இந்த விபத்தில், நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் நடராஜ். அப்போது அவரது ஹெல்மெட் உடைந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பரங்கிமலை போலீசார் நடராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து சிமெண்ட் லாரி ஓட்டுநரான கும்பகோணத்தைச் சேர்ந்த சதீஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதலில் நடராஜ் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்தார் என்று தகவல் வெளியான நிலையில்,” அவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். அவரது தலையில் லாரி ஏறியதால் ஹெல்மெட் நொறுங்கியது” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!](https://minnambalam.com/k/2019/07/11/22)**
**[மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/07/11/21)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/10/80)**
**[இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!](https://minnambalam.com/k/2019/07/11/48)**
�,”