கடை இன்று விடுமுறை: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

அப்பாக்கள் தினமும் இல்லை. ஆனா, எல்லாரும் ‘தந்தை’ன்ற வார்த்தையை யூஸ் பண்றாங்களேன்னு பாத்தா வழக்கம்போல நம்ம பிரதமர் தான் வண்டில ஏறியிருக்காப்ல. இந்த மாதிரி வெயிட்டான கண்டெண்டையும் ஒரு பக்கம் குடுத்துடுறாங்க, இன்னொரு பக்கம் பிரதமரைப் பத்தியோ, ஜனாதிபதியை பத்தியோ ஏதாவது பேசுனா கம்பேனியவே தூக்கிருவோம்னும் சொல்றாங்க. நமக்கு கையும், வாயும் சும்மா வேற இருக்காது. சரி, நம்ம பாட்டுக்கு போய் நம்ம பொழப்பை பாக்கலாம்னு டீ கடைக்கு போனா… ராஜேந்திர பாலாஜியோட பேட்டி போட்ருக்காய்ங்க. உஸ்ஸ்ஸ்ஸ்….. நான் ஸ்டேட்டஸும் போடல அப்டேட் குமாரும் போடல போங்கயான்னு சொல்லிட்டு, ‘கடை இன்று விடுமுறை’ போர்டை வெச்சிட்டு வந்துட்டேன். நீங்க அப்டேட்டை படிங்க.

**செங்காந்தள்**

சில சமயம் ‘நாணயம்’ இல்லாமல் நடந்து கொள்கின்றன ஏடிஎம் மெஷின்கள்…!!!

**கோழியின் கிறுக்கல்!!**

கண்ணை மூடிக் கொண்டு எவரையும் ஆதரிக்காதீர்கள்!!

பின்பு குருடாகத் தான் அலைந்து கொண்டிருப்பீர்கள்!!

**SKP KARUNA**

ஹல்லோ #bigbosstamil3 நான் உன் கிட்டே நேராவே கேட்கிறேன்! நீ பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துறியா? இல்லே கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்து சுயம்வரம் நிகழ்ச்சி நடத்துறியா?

**ரமேஷ்.ஏ**

பேன்சி இல்லாத போன் நம்பர்கள் பெற்றோர்களுக்கென உருவாக்கப்பட்டவை…!!!!

**Suhanya Sri**

அதிமுக : விஜய் ஒரு நடிகர் இப்படி எல்லாம் போசனும் என்பது அவரின் தலை எழுத்து.எதிர் கட்சி தலைவராகவே இருக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் தலை எழுத்து.

நெறியாளர் : இத எல்லாம் பாக்கனும் கேட்கனும் என்பது மக்களின் தலை எழுத்தா.?

**????செந்திலின்_கிறுக்கல்கள்????**

ஆண்களின் மேல் உள்ள கோபத்தை தலையில் கொட்டி தீர்த்தால் அம்மா…! தீட்டி தீர்த்தால் மனைவி…! அவ்வளவு தான் வாழ்க்கை!

**செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்..**

கொக்கின் கூரலகு

கொத்தித் தூக்கும்போதுதான்

வாழ்ந்த பெருங்குளத்தை

முழுதாய்ப் பார்க்க

வாய்க்கிறது மீனுக்கு!

-மகுடேசுவரன்

**கோழியின் கிறுக்கல்!!**

சின்னம்மா கை காட்டினவர் தான் முதல்வர் ஆனார்!

ஆனா அவர் வந்து நம்மளை காட்டு காட்டுன்னு காட்டுறார்!!

**????செந்திலின்_கிறுக்கல்கள்????**

உலகில் லோ பட்ஜெட் ஆர்கிடெக்ட் குருவியாக தான் இருக்கும்!

**வழிகாட்டி**

அவள் மனமென்னும் பாறாங்கல்லை உடைக்க

முடியாமல் என் மனம் சிதறி தான்

போகிறது கூழாங்கற்கலாக..!!

**செல்வமணி**

ஏழையாகி போனாலும்

ஏர் கலப்பையை ஓரங்கட்டி வைப்பதில்லை…‌

விவசாயிகள்

**கற்றது அரசியல்**

மாரிதாஸுக்கு கோர்ட்டில் இருந்து சம்மன் வந்திருக்கிறது இந்தியாவை காப்பாற்ற இதைவிட சிறந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்காது பாகிஸ்தானோடு தொடர்புடைய தமிழக அரசியல்வாதிகளை பற்றி தன்னிடம் இருக்கும் அத்தனை ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் முடிஞ்சது செய்வாரா மாரி?

**Arunan Kathiresan**

அண்ணாபல்கலைக்கழக பாடத்தில் பகவத்கீதை சேர்ப்பு!

“சதுர்வர்ணயம் மயா சிருஷ்டம்” என்று பொறியியல் மாணவர்கள் படிப்பார்கள்! இதுதாண்டா புதிய கல்வி கொள்கை!

**செந்திலின்_கிறுக்கல்கள்**

ஆண்களின் மேல் உள்ள கோபத்தை தலையில் கொட்டி தீர்த்தால் அம்மா…! தீட்டி தீர்த்தால் மனைவி…! அவ்வளவு தான் வாழ்க்கை!

**ச ப் பா ணி**

விபத்து

ஏன் இந்த வேகம்?

எதற்கிந்த அவசரம்?

தலைக் கவசம் ஏன் போடவில்லை?

எந்தக் குற்றமும்

கண்டுபிடிக்க முடியாது அதனிடம்

கவசம் நொறுங்கி

செத்துக் கிடக்கிறது

ஒரு நத்தை

நட்டநடுச் சாலையில்.

மித வேகம்

மிக நன்று

யார் சொன்னது?

-சேயோன் யாழ்வேந்தன்

-லாக் ஆஃப்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share