கடைசில கேப்டனையே கன்பீஸ் பண்ணிடுவாங்க போல :அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

நடிகர் சங்க எலெக்‌ஷனுக்காக விஜயகாந்த்தை பாக்கப்போறதா சொல்லிட்டு கிளம்புனார் ஒரு நண்பர். பாத்து சார், அவங்க மச்சானும், மனைவியும் ஆளுக்கு ஒரு பக்கம் கூட்டணி பேச ஸ்டார்ட் பண்ணிடுவாங்கன்னு பக்கத்துல ஒருத்தன் கலாய்க்கிறான். ஒரு தரம் ராங் டீலிங்ல போனா, சாவுற வரைக்கும் சொல்லிக் காட்டுவாங்க போலன்னு சைலண்டா எழுந்து ஆஃபீஸ் நோக்கி வந்தா திடுதிப்புனு மழை பெய்ய ஆரம்பிச்சிருச்சு. சரி, எல்லாத்துக்கிட்டயும் காட்டுவோம்னு ஆஃபீஸுக்குள்ள போய் கூட்டிட்டு வர்றதுக்குள்ள, மழை வந்த அடையாளமே இல்லாம சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிருச்சு. ஆத்தா சத்தியம்டான்னு சொன்னாலும் ஒரு பய நம்பல. அப்பறம், ரோட்ல கிடந்த ஒரு பிளாஸ்டிக் யூஸ் அண்ட் த்ரோ கப்புல 45 எம்.எல் அளவுக்கு தேங்கி நின்ன தண்ணியக் காட்டி மழை வந்ததை நிரூபிக்க வேண்டியதா போச்சு. ஆனா ஒன்னு மட்டும் உறுதி; மழை வராம, தண்ணி இல்லாம, ரெண்டு மக் தண்ணில குளிச்சிட்டு ஆஃபீஸ் வந்தாலும், இந்த பிளாஸ்டிக்கை யூஸ் பண்றதை நிறுத்த மாட்டீங்க. அப்டேட்டை படிச்சிட்டே இருங்க. நான் போய் வேர்ல்டு கப் மேட்சை எல்லாம் நம்ம ராம்நாடு பக்கம் மாத்தி வைக்க சொல்லி, வாட்ஸப்ல மெஸேஜ் அனுப்பிட்டு வர்றேன்.

**கோழியின் கிறுக்கல்!!**

எவ்வளவுக்கு எவ்வளவு நடை குறைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு எடை கூடுகின்றது!!!

**ஜோக்கர்…**

எங்கு, எதை, எப்படி பேசுவது என பேசுவதல்ல பேச்சுக்கலை”

எங்கு, எதை, எப்படி பேசக்கூடாது என அறிந்து பேசாமல் இருப்பதே “பேச்சுக்கலை”

**உள்ளூராட்டக்காரன்**

ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் விஜயகாந்துடன் சந்திப்பு…

மச்சான் சீட் பேரத்தை தொடங்கிட போறாரு…

**Sarcastic Dude**

இதுக்கு தான் ராம்நாட்ல ஒரு ஏர்போர்ட்டும் ஸ்டேடியமும் கட்டிவிட்டா மழை இல்லாம worldcup நடத்தலாம்..

ஐடியா இல்லாத பசங்க.

**mohanram.ko**

சமைப்பவரின் கை’வண்ணத்தால்’ தக்காளி சாதமும் சிகப்பாகிவிடுகிறது

**วiຖ໐**

அம்மாவை விடவும் மனைவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் இருக்கும்வரை முதியோர் இல்லங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

**களிமண் ™**

என்ன தான் ஏழு

கழுதை வயசானலும் கோயிலில

சிதறு தேங்காயை கண்டதும் ஓடி

போய் பொறுக்கி தின்ன தான்

சொல்லுது மனசு

**மாஸ்டர் பீஸ்**

கல்வெட்டு மட்டும் இல்லனா இந்நேரம் தமிழன் முட்டாள் என முத்திரை குத்திருப்பானுங்க…

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

**ஆஹான்!!**

கவரிங் நகை கடைக்கு “கல்யாணி” னு பொண்ணு பேர வைச்சிருக்காங்க.

தங்க நகை கடைக்கு “கல்யாண்” னு பையன் பேர வைச்சிருக்காங்க.

அப்டினா… பசங்க மனசு சுத்த தங்கம்னு தானே அர்த்தம்?

**ஹாசிகா**

சாக்கடையில இருந்து நாத்தம் வருதுனு அதுமேல கல் எடுத்து அடிச்சா கறை தான் மிஞ்சும்

சாக்கடையோட குணமே நாத்தம் அடிக்கிறது தானே ….

**உயிரெழுத்து**

‘நேர்மை’யுடன் இருந்தால் பலபேர் மறைமுகமாக வசைபாடதான் செய்வார்கள்.

**மித்ரன்**

ஓபிஎஸ்-ஈபிஎஸ் சகோதரர்கள் போல் இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்கள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

எப்படி நட்புக்காக சரத்குமார் விஜயகுமார் மாதிரியா..?!

**ஊர்க்காவலன்™**

யப்பா நிக்காம நேரா போப்பானு சொல்லிட்டு கொஞ்சம் சாஞ்சி உக்காந்தா இன்டிகேட்டர போட்டு ரைட்ல திருப்பும் பாருங்க அதான் சார் வாழ்க்க…

**தேவதை**

கிடைக்காத வரையில் இருக்கும்

நம்பிக்கை கிடைத்த அடுத்த

நொடியே தொலையவும் நேரிடும்

என்பதை உணர்ந்து விட்டால் போதும்.

எதிர்பார்ப்பு எந்த விதத்திலும்

மனதை பாதித்திடாது.

**சோழ நாட்டு இளவரசன்**

இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம்

First rule …

அதிகாரத்தில் கை வைக்க கூடாது.

“No power of the house”

வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும்.

நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension

Second_Rule …

அடிப்பேன்னு மிரட்ட கூடாது

“No unwanted scaring”

ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க.

அவங்கள தேவை இல்லாம அடிப்பேன்னு சொல்லி அடி வாங்கிக்க கூடாது.

Third_rule …

அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும்

நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க.

அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்

Fourth_Rule ….

எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..

No weapons …

ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது

5th …Idhaan romba mukkiyamaanadhu …

ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும் கூச்சமே படாம Sorry ketranum …

மானம் அறவே கூடாது.

-லாக் ஆஃப்.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share