<கடிதம் எழுதும் போட்டி!

public

[

கடிதம் எழுதும் போட்டியில் கலந்துகொள்ள அஞ்சல் துறை சார்பில் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளாது.

அஞ்சல் துறை சார்பில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி 2018 ஜனவரி 7ஆம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை நடத்தப்படவுள்ளது. போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். மாணவர்கள், பயணிக்கும்போது ஏற்படும் அனுபவங்கள் குறித்துக் கடிதம் எழுத வேண்டும். ஆங்கிலத்தில் அல்லது பட்டியலிடப்பட்ட மொழிகளில் எழுதலாம். 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு அஞ்சல் வட்டத்திலும் தேர்வாகும் கடிதங்களுக்கு ஆறுதல் பரிசாக 1,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச அளவிலான கடிதப் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும். அதில் தேர்வு செய்யப்படும் சிறந்த கடிதங்களுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள், சான்றிதழ், சர்வதேச அஞ்சல் தலைகள் ஆகியவை வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 21ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் புகைப்படம், பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பள்ளி, வீட்டு முழு முகவரி ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள தலைமை அஞ்சல் அதிகாரி, அஞ்சல் வட்ட அதிகாரி, மண்டல அதிகாரி ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.indiapost.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0