கடாரம் கொண்டான் படத்தின் வியாபாரத்துக்கு விக்ரமின் முந்தைய படங்களின் முடிவுகளே பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன.
தமிழ் சினிமாவில் எல்லா தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் படம் கடாரம் கொண்டான்.
அரசியல் பணி, பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் என நெருக்கடியான நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசன் தயாரித்திருக்கும் படம். ராஜ்கமல் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் படங்களுக்கு சந்திரஹாசன் இணை தயாரிப்பாளராக இருப்பார். அவர் காலமாகிவிட்டதால் அவர் பங்கு பெறாத முதல் படமாகத் தயாராகி இருக்கிறது கடாரம் கொண்டான்.
தமிழ் சினிமாவில் அடுத்த கமல்ஹாசன் எனக் கூறப்படும் விக்ரம், கமல் மகள் அக்க்ஷரா ஹாசன் நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தை முதல் பிரதி அடிப்படையில் டிரைண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்குத் தயாரித்துக் கொடுத்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமை மொத்தமாகவோ, ஏரியா அடிப்படையிலோ அவுட்ரேட் முறையில் வியாபாரம் நடைபெறவில்லை.
விக்ரம் இரட்டை வேடங்களில் நாயகனாக நடித்து 2016 இறுதியில் வெளியான இருமுகன் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெற்ற படம். அதன்பின் இவரது நடிப்பில் 2018ஆம் வெளியான ஸ்கெட்ச், சாமி – 2 என இரு படங்களும் வசூல் அடிப்படையில் தோல்வியைத் தழுவிய படங்கள்.
இதனால் கடாரம் கொண்டான் படத்தின் தமிழ்நாடு உரிமை சுமார் 20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யும் நோக்கத்தில் விலை கூறப்பட்டது. 2016ஆம் ஆண்டு வெளியான இரு முகன் தமிழ் நாட்டில் 19 கோடி ரூபாயும் 2018ஆம் ஆண்டு வெளியான ஸ்கெட்ச், சாமி – 2 ஆகிய படங்கள் தலா 12 கோடிக்கு உள்ளாகவே விநியோகஸ்தர்களுக்கு வருமானத்தைப் பெற்றுத் தந்தது.
அதனால் 20 கோடி ரூபாய்க்கு கடாரம் கொண்டான் படத்தை விலைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் தரப்பில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் தயாரிப்பு தரப்பே கடாரம் கொண்டான் படத்தை விநியோகஸ்தர்கள் மூலம் வெளியிடுகிறது.
கடந்த இரு மாதங்களாக வெளியான தமிழ்ப் படங்கள் எதுவும் திரையரங்குகளுக்கு வருமானத்தைப் பெற்று தரும் படங்களாக இல்லாமல், வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு வெளியேறின.
நட்சத்திர அந்தஸ்து, பிரமாண்டமான விளம்பரங்களுடன் ஜூலை 19 அன்று வெளிவர உள்ள கடாரம் கொண்டான் படத்தைத் திரையிட தியேட்டர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”