=கடந்த காலத்தின் வாசனை !

Published On:

| By Balaji

ஒரு கப் காபி

இந்த நொடியில் இந்த தருணத்தில் வாழ்வது பற்றியே பல ஞானிகளும் சொல்லிச் சென்றுள்ளனர். பழையதை தூக்கிச் சுமக்கவும் வேண்டாம், வரவிருப்பதைப் பற்றிய பதட்டமும் வேண்டாம் என அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் எந்த கேள்வியுமின்றி கடந்த காலத்தை புறக்கணித்துவிடமுடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

சென்னைக்கு வந்த புதிதில் இந்த நகரம் எனக்கு மிகவும் அந்நியமாக இருந்தது. மனிதர்கள் நான் இதற்கு முன் பழகியவர்களின் சாயலில் இல்லை. ஊரின் நினைவுகளே என்னை வட்டமிட்டபடி இருந்தன. நாட்கள் பறக்கத் தொடங்கின.

இப்போது இந்த இடம் பிடித்தமானதாகிவிட்டது. தூரத்தில் நின்ற மனிதர்கள் நண்பர்களாகிவிட்டனர். எவை குறித்தெல்லாம் பயந்தேனோ அது மிகவும் எளிமையாக இருக்கிறது. முரட்டு சுபாவம் உள்ளவர்களாக இருக்கக்கூடும் என்று நினைத்தவர்கள் எவ்வளவு பெரிய குழந்தைகள் என்பது இப்போது புரிகிறது.

இப்போது எனது ஊர் பற்றிய சித்திரங்கள் லேசாக மங்கத் தொடங்கி சென்னையின் ஆரம்ப நாள்களே பசுமையாக மனதில் படிகிறது. ஏதேனும் ஒரு சுவை, வாசனை, வார்த்தை, இசை என எண்ணற்ற காரணிகள் அந்த நினைவுகளுக்குள் இழுத்துச் செல்கின்றன.

இதுவும் கடந்து போகும் என்பதை உணர்த்த எனக்கு கடந்த கால நினைவுகளே காரணமாக இருக்கின்றன. நிகழ்காலத்தை எளிதாக கடக்க கடந்த காலத்தின் வாசனை தேவையாக இருக்கிறது.

**-மதரா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share