தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் சாலைகளில் செல்லும்போது சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். சாலை விதிகளைப் பின்பற்றி விபத்துக்களைக் குறைக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, போக்குவரத்து கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
தமிழகத்தில் ஏற்படும், சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹெல்மெட் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பரிசு வழங்குதல், துண்டுப் பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சிக்னல்களில் நிற்கும் வாகனவோட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற செயல்களின் மூலம் சாலை விபத்துகள் குறைந்துள்ளன.
2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை நடத்த விபத்துகளை விட இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 3,899 சாலை விபத்துகளும், 319 உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.
விபத்துகளை மேலும் குறைக்க, சிவப்பு விளக்கைத் தாண்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது, ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். வாகனத்தை இயக்கும் போது, மொபைல் போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். என அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.�,