மக்களோட மக்களா வாழுங்கன்னு சொன்னா, டீசன்ஸி இல்லாத பசங்க; ஹைஜீனிக்கான லைஃப் வாழுறோம்னு ஓலா கேப்லயும், ஸ்விக்கி ஆப்லயுமா வாழ்ந்துக்கிட்டு கெடந்தாங்க. தண்ணி பிரச்சினை வந்ததால, தெருவுக்கு எறங்கிவந்து லாரில வந்த தண்ணியை கியூவுல நின்னு புடிக்க சொன்னா, இடுப்புல குடம் நிக்கல, தோள் மேல தூக்குனா வலிக்குதுன்னு ஒரு நியூ கப்புள் சலம்பிக்கிட்டு கெடக்காய்ங்க. அந்த ரெண்டு பேரும் யாருன்னு பாத்தா, ஹிப்பை ஸ்லிம்மா வெச்சிக்க ஃபிட்னஸ் செண்டருக்கு போறவுகளும், ஹார்ம்ஸை கும்முனு வெச்சிக்க ஜிம்முக்கு போறவுகளும் தான். பக்கத்து வூட்டு அக்கா, குடத்தை இடுப்புலயும், புள்ளைய தோள்ளையும் தூக்கிட்டு அதுபாட்டுக்கு நடந்துபோகுது. இவங்க, ‘டூ கொடம் ப்ளீஸ்’னு லிஃப்ட் கேட்டுக்கிட்டு கெடக்காங்க. ஊரு விட்டு ஊரு வந்தாலும் பணம் இருந்தா எல்லாமே சரியா போயிரும்னு நம்புறது பெரிய தப்பு. அந்தந்த ஊருக்கேத்தாப்ல மாறோணும். இல்லைன்னா இப்டி தான் ஆகும். சரி, நீங்க அப்டேட்டைப் படிங்க. எங்கக்கா தமிழிசையோட செல்ஃபோனை, பிரஸ்மீட்ல யாரோ லவட்டிட்டாங்களாம், நான் போய் கண்டுபுடிச்சிட்டு வர்றேன்.
**கிப்சன்**
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து திமுகவினர் போராட்டம்
இதுக்குதான்யா திமுக வுக்கு ஓட்டு போட்டோம்.
**ச ப் பா ணி**
வாயை இறுக்கி மூடி ஸ்கூட்டியை நிறுத்தும் பெண்கள் பேரழகு.!
**Contractor senthazalravi**
கால்களை இரு பக்கமும் நீட்டி ஏரோப்பிளேன் லேண்ட் ஆவது போல வண்டியை நிறுத்தும் பெண்களும் உண்டு.
**எனக்கொரு டவுட்டு**
தமிழ்நாட்டில் யாகம் செய்வதை நிறுத்தினால் மட்டுமே உலகக்கோப்பை நடக்கும் என ICC அறிவிப்பு..!
**mohanram.ko**
மாடுகளை பொறுத்தவரை…
இன்னிக்கு பொறந்தா நாளைக்கு சீம்பால்
**கோழியின் கிறுக்கல்!!**
‘கல்லில் ஊத்திட்டேன் இந்த ஒன்றை மட்டும் சாப்பிட்டிடு’
‘தட்டில இருக்கிற சட்டினியை வேஸ்ட் பண்ணாத’
என்பன நம்மை இன்னொரு தோசை சாப்பிட வைக்க கையாளப் படும் உத்திகளில் சில!!
**ஜோக்கர்…**
“குடிக்க தண்ணீரின்றி குடும்பமே தற்கொலை”ன்னு செய்தி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
“மத்திய அரசை ஆதரிக்காததால் வந்த பிரச்சினைதான் இது”ன்னு அப்பவும் அலட்சியமா பதில் சொல்ல போறாங்க.
**ச ப் பா ணி**
சோறு போட Swiggy இருக்கான் பட்டினிய பார்த்ததில்ல..
**எனக்கொரு டவுட்டு**
கழிவறையை பயன்படுத்தினால் கூடுதலாக ஒரு பாட்டில் தண்ணீர் கொண்டுவாருங்கள் – மாணவர்களுக்கு அறிவுறுத்தும் பள்ளிகள்
விட்டா, ஹக்கிஸ் மாட்டிட்டு வாங்கன்னு சொல்வாய்ங்க போல..!
**தமிழன்டா**
தமிழ்நாட்ல உள்ள ரயில்வே அதிகாரிகள் இந்தியிலதான் பேசுவாங்களாம்
இதுக்காகத்தான தேர்தல்ல செருப்புல அடி வாங்குனீங்க, இன்னுமாடா புத்தி வரல
**உள்ளூராட்டக்காரன்**
Breaking news:
இன்று மேட்ச் நடைபெறுகிறது
**ஜோக்கர்… **
“நான்கு பேர் 4 விதமாய் பேசுவார்கள்” என்பதில், ஒப்புக்கு கூட ஒருவரும் ஒத்துக்கொள்வதில்லை,
நாமும் அந்த “நான்கு பேரில்” ஒருவராய் இருப்போம் என்று..!!
**வைரமுத்து**
இருப்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம்.
ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது
ஆட்டின் குரல்வளையைத்தான்.
கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள்
மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்.
வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு.
**ஜோக்கர்…**
ஏனோ கலப்படம் செய்ய முடியாது என்பதால்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது..!!
“தண்ணீர்”
**உள்ளூராட்டக்காரன்**
swiggyல தண்ணி சப்ளை எப்போ தொடங்குவாங்க? – சென்னைவாசி
**கோழியின் கிறுக்கல்!!**
இதுக்கு தான் இங்கிலிஷ்காரன் ‘Rain Rain go Away’ என்ற பாட்டை எழுதியிருப்பானோ!?
**யாதுமானவள் (மகளுக்கு)**
” இடுக்கண் வருங்கால் நகுக ” அப்டின்னு சொன்ன வள்ளுவர்தான்,
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் ” அப்டினும் சொல்லிருக்கார்
**செந்திலின்_கிறுக்கல்கள்**
மெகா நடிகர்களின் மெகா பட்ஜெட் படங்கள் சக்ஸஸ் மீட்டோடு முடிவுக்கு வந்து விடுவது டிசைன்!
**A.P.Perumal.**
மீதமாகும் உணவுகளை உணவில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு வழங்குமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கடைசி வரைக்கும் ஏழைகளை ஏழைகளாவே வெச்சிருப்பிங்களா? தன்னிறைவே கிடையாதா?
-லாக் ஆஃப்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[தண்ணீர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் மதிய உணவை நிறுத்த முடிவு!](https://minnambalam.com/k/2019/06/14/41)**
�,”