;ஓய்வை அறிவித்த ஹெராத்

Published On:

| By Balaji

வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான 40 வயதான ரங்கனா ஹெராத் தற்போது இலங்கையில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். பிபிசி சிங்களா ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஹெராத், இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறும் இங்கிலாந்து தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போகிறேன். தற்போது இலங்கை பங்கேற்றுவரும் தென்னாப்பிரிக்க தொடருக்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு மூன்று மாதங்கள் ஓய்வு இருக்கிறது. அதை நான் இப்போதே முடிவு செய்து விட்டேன். எல்லா கிரிக்கெட் வீரருக்கும் ஒரு நேரம் வரும். அவர்கள் விளையாட்டை நிறுத்துவதற்கு. அந்த நேரம் இப்போது எனக்கு வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு குருவடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஹெராத் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். அந்த அறிவிப்பிற்குப் பிறகு அவர் பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில் 24 சராசரியுடன் 121 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இடக்கை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 418 விக்கெட்டுகளுடன் தற்போது ரங்கனா ஹெராத் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து வாசிம் அக்ரம், டேனியல் வெட்டோரி, சமிந்தா வாஸ் ஆகியோர் முறையே 414, 362, 355 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share