இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது ஓய்வு முடிவு தொடர்பாக வெளியாகும் செய்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த காணொளி வைரலாகி வருகிறது. அதில், தனது ஓவியத் திறமையை அடிப்படையாகக் கொண்டு கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்யப் போவதாகக் கூறியுள்ளார்.
அந்த காணொளியில் 3 ஓவியங்களை காட்சிப்படுத்தினார் தோனி. அப்போது, சிறு வயது முதலே தனக்கு ஓவியங்கள் மீது ஆர்வம் இருந்தது எனவும், கிரிக்கெட்டுக்கு பிறகு ஓவியங்களைக் கையில் எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் காட்சிப்படுத்திய 3 ஓவியங்களில் ஒன்று அழகான மலைப்பகுதியை குறிக்கும். எதிர்காலத்தைச் சேர்ந்த நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய விமானம் இரண்டாவது படத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்றாவது ஓவியத்தில், சிஎஸ்கே ஜெர்சியுடன் தோன்றும் கிரிக்கெட் வீரர் படம் உள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. அதோடு தனது ஓய்வு அறிவிப்பை தோனி வெளியிடுவார் என்பதை அறிவுறுத்தும் விதமாக உள்ளது இந்த காணொளி. 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 341 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,500 ரன்களைக் குவித்துள்ளார் தோனி. இதில் 10 சதங்களும் 71 அரை சதங்களும் அடங்கும்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
.
�,”