நாம் ஒரு வேளை உண்ணும் உணவில் 100 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அதிர்ச்சி தகவல்கள வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்திலுள்ள ஹெரியாட் – வாட் பல்கலைக்கழகம் உணவில் உள்ள மாசுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது ;
மூன்று வீடுகளில் உள்ள உணவு மேஜைகளில் வைக்கப்பட்ட உணவு வகைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இருபது நிமிடங்களில் சாப்பிடக் கூடிய உணவாக வைக்கப்பட்டது. சாப்பிடும்போது அந்த உணவின் மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. பின்னா் உணவு மாதிரிகள் சோதிக்கப்பட்டபோது அதில் 100 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தத் துகள்கள் எங்கிருந்து வருகின்றன என்று ஆராய்ந்தபோது அவை வீட்டிலுள்ள திரைச்சீலைகள். அணியும் சிந்தட்டிக் உடைகள் மற்றும் வீட்டின் ஒரு சில பெயிண்ட்கள் ஆகியவற்றிலிருந்து பறந்து வந்து உணவின் மீது துகள்களாக படர்ந்துள்ளது தெரிய வந்தது.
சராசரியாக ஒரு நபர் ஒரு ஆண்டுக்கு 68,415 அபாயகரமான பிளாஸ்டிக் துகள்களை விழுங்குகிறார்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.�,