ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய வசூல்!

Published On:

| By Balaji

செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் ரூ.1 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் மாதம் ஒன்றுக்குச் சராசரியாக ரூ.1 லட்சம் கோடியை ஜிஎஸ்டியின் கீழ் வசூலிக்க மத்திய நிதியமைச்சகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் சென்ற ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஒவ்வொரு மாதத்திலும் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை எட்டவே இல்லை. இந்நிலையில் அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். வரித் துறை அதிகாரிகளின் சிறப்பான நடவடிக்கைகளாலும், வரி ஏய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளதாலும், ஜிஎஸ்டி நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாலும் வரி வசூல் அதிகரித்துள்ளதாக ஜேட்லி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டியில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.16,464 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.22,826 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.53,419 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், செஸ் வரியாக ரூ.8,000 கோடி கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் மே மாதத்தில் ரூ.94,016 கோடியும், ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியும், ஜூலை மாதத்தில் ரூ.96,483 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.93,960 கோடியும், செப்டம்பர் மாதத்தில் ரூ.94,442 கோடியும் ஜிஎஸ்டியாக வசூலிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share