ஒரு லட்சத்துக்கு பட்டுப் புடவை வாங்கினால் இரு அத்திவரதர் பாஸ் இலவசம்!

Published On:

| By Balaji

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிற அத்திவரதர் சுவாமி தரிசனத்துக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிற நிலையில்நேற்று முன் தினம் (ஜூலை 18) மட்டுமே கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். இதுவரை எட்டு பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் அத்திவரதர் திருவிழாவை முன்னிட்டு காஞ்சி மாவட்ட நிர்வாகம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்று காஞ்சி மாவட்ட அனைத்துக் கட்சிக் குழுவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காஞ்சி மாவட்ட நிர்வாகி தீணனிடம் பேசினோம். இன்று அனைத்துக் கட்சிக் குழுவினரோடு கலெக்டரை சந்திக்க காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நம்மிடம் பேசினார் தீணன்.

“அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் நிற்கின்றனர்.ஆனால் சில சமூக விரோதிகளும் விவிஐபி பாஸ் பெற முடிகிறது. அவர்களுக்கும் சிறப்பு தரிசனம் கிடைக்கிறது. சில ஆயிரங்களுக்கு அதிகாரிகளின் துணையோடு பாஸ் விற்கப்படுகிறது. போலியான பாஸ்கள் கூட கொடுக்கப்படுகின்றன என்று தகவல் வருகிறது. இந்த நிலைக்கு மாவட்ட ஆட்சியரே காரணம் என்கிற குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் செயல்பட்டிருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்” என்ற தீணன்,

“டோனார் பாஸ்கள் என்ற முறையில் ஏராளமான பாஸ்களை அச்சடித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருப்பவர்களே வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். டோனார் பாஸ் என்ற பெயரில் காஞ்சி, மற்றும் காஞ்சியை ஒட்டியுள்ள பட்டு வணிகர்களுக்கு ஏராளமான பாஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பட்டு வணிகர்கள் தங்களிடம் புடவை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு புடவை வாங்கினால் இரண்டு அத்திவரதர் பாஸ் இலவசம் என்று ஆசை காட்டி, பட்டுப் புடவைகளை விற்றுவிடுகிறார்கள். இவ்வாறு பல மோசடி வழிகளில் பாஸ்களும், போலி பாஸ்களும் காஞ்சிபுரத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கின்றன. உடனடியாக அரசு இதில் தலையிட்டு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் தீணன்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share