சென்னைப் பல்கலைகழக ஆங்கிலத் துறையின் சார்பில் ‘கோவேறு கழுதைகள் 25’ விழா மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றது. துறையின் தலைவர் பேராசிரியர் ஆம்ஸ்ட்ராங் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். எழுத்தாளர் சமஸ் சிறப்புரை ஆற்றினார்.
இமையத்தின் எழுத்துக்குத் தமிழ் இலக்கியச் சூழலிலும் தமிழ்ச் சமுதாயத்திலும் உள்ள முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட சமஸ் பல்கலைக்கழகங்களின் செயல்பாடு பற்றிய தன் விமர்சனத்தையும் முன்வைத்தார்.
இலக்கியம் என்றால் என்ன, இலக்கியத்தை ஏன் படிக்க வேண்டும், இலக்கியத்துக்கும் சமூகத்திற்கும் இருக்கிற உறவு என்ன, இலக்கியத்துக்கும் தனிமனிதனுக்கும் இருக்கும் உறவு என்ன, மொழிக்கும் இலக்கியத்திற்க்கும் இருக்கிற உறவு என்ன, இலக்கியம் ஏன் கலாச்சாரத் துறையாக இருக்கிறது என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு விரிவான பதில்களைக் கூறினார்.
தன்னுடைய கதைகள் உருவாகும் விதம் பற்றி மிகவும் சுவாரஸ்யமாக இமையம் விவரித்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேராசிரியர் அழகரசன் நெறியாளுகையில் முதுகலை மாணவிகள் சிந்து, கோபிகா, காயத்ரி ஆகியோர் கோவேறு கழுதைகள் நாவலின் சில பகுதிகளைப் படித்தனர். நிகழ்வின் இறுதியில் பேராசிரியர் வெங்கட்ரமணன் நன்றியுரை கூறினார்.
�,