நிலவைச் சுட்டிக் காட்டும் கை!
ஒரு ஜென் துறவி தனது சீடனுக்குப் பாடம் எடுக்கும்போது அவருக்கு ஒரு சந்தேகம். ஒரு புத்தகத்தைக் காண்பித்து, இதில் இருப்பதைப் படித்துச் சொல் என்றார்.
மாணவன் படித்துச் சொன்னான். “குருவே, உங்களுக்குப் படிக்கத் தெரியாது. ஆனாலும் எப்படி நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லித்தருகிறீர்கள்? என்று கேட்டான்.
அவர் பதில் சொல்லவில்லை. அவனை வெளியில் அழைத்துச் சென்று தன் கையை நீட்டி வானத்தைக் காட்டி, “அங்கே பார், அது தான் நிலா!” என்று சொன்னார்.
சீடனுக்குப் புரியவில்லை. இப்போது ஏன் நிலாவைக் காட்டுகிறார்?
குரு தொடர்ந்தார்.
“புத்தகம் என்பது என் கை போன்றது. கையால் நிலவைச் சுட்டிக் காட்டியதால் என் கை நிலவாக ஆகிவிடாது. என் கை இல்லாமலும் நிலவைப் பார்க்க உன்னால் முடியும். அப்படி பார்க்க முடியாத நேரத்தில் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது, கையின் தேவை முதல் முறை நிலவைச் சுட்டிக் காட்டியதும் முடிந்துவிட்டது. அதற்குப் பின் எப்போது வேண்டுமானாலும் இந்தக் கையின் துணையின்றி நிலவைப் பார்க்கலாம்” என்றார்.
�,”