v
ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் அறிமுக நடிகை ப்ரியா வாரியர். இதனால் அப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை.
ஒரு அடார் லவ் படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் ஒமர் கைரலி தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அவரும் படத்தில் நடித்த மற்றொரு நடிகையான நூரின் ஷெரிஃப்பும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஒமர், “இந்தப் படத்தை தொடங்கும் போது ரோஷனும், ப்ரியாவும் கதையைப் பற்றி ஏதும் அறியாதவர்களாக இருந்தனர். எனக்கும் அது தான் தேவையானதாக இருந்தது. திடீரென அவர்களுக்கு கிடைத்த பிரபலம் நடிகர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தியது. ப்ரியாவும், ரோஷனும் கதையை மாற்ற முற்பட்டனர். பலரும் அவர்களுக்கு அறிவுரை கூறியபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை” என்று கூறினார்.
ப்ரியா காட்சிகளை மாற்றியதால் நூரின் பங்குபெறும் காட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்ததுள்ளதாகவும் அவர் கூறினார். அவர் ஏற்படுத்திய மாற்றம் தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று ஓமர் கூறியுள்ளார்.�,