நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் குஜராத் அணியை பேட் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் பெட் செய்த குஜராத் அணி தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாமல் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் ரெய்னா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 183 ரன்களை சேர்த்தது. கடந்த ஐ.பி.எல். தொடரில் இதேபோல் இந்த இரண்டு அணிகளும் விளையாடிய போட்டியில் கொல்கத்தா அணி 158 ரன்களை எடுக்க முடியாமல் தோல்வியடைந்தது. ஆனால் இந்தமுறை மிகச் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீர் மற்றும் தொடக்க வீரர் லியான் விக்கெட்டை இழக்காமல் 184 ரன்கள் பெற்று அணியை வெற்றிபெறச் செய்தது.
லியான் 41 பந்துகளில் 97 ரன்களும், கம்பீர் 48 பந்துகளில் 76 ரன்களும் சேர்த்திருந்தனர். அதனால் 14.5 ஓவரில் எளிதாக குஜராத் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவிட்டனர் கொல்கத்தா அணியினர். இதுவரை, கொல்கத்தா அணி வீரர்களின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுதான். கடந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணியிடம் ஒரு வெற்றியும் பெறாத கொல்கத்தா அணி, இந்தமுறை ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் வெற்றிகண்டுள்ளது. கடைசித் தொடரில் சிறந்த அணியாக விளங்கிய குஜராத் புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தமுறை அணியில் முக்கியமான இரண்டு ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் பிராவோ அணியில் இடம்பெறவில்லை என்பதும் ஒருவித பின்னடைவுக்கு காரணம் என்றே கூறலாம். சென்னை அணியில் விளையாடிய ரெய்னா, பிராவோ, ஜடேஜா, மெக்குலம் ஆகிய சிறந்த வீரர்கள் இந்த குஜராத் அணியில் இடம்பெற்று கடந்த ஐ.பி.எல்.களில் பலம் சேர்த்தார்கள். இந்தமுறை, ஜடேஜா காயம் காரணத்தால் விலகியுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் போட்டிக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக சென்னை அணியில் இடம் பெற்றிருந்த மற்றொரு வீரரான ஜகாடிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் சரிவர பயன்படுத்தத் தவறினார். நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லியன் 19 பந்துகளில் அரைசதம் அடித்ததுதான் கொல்கத்தா அணி வீரரின் இரண்டாவது வேகமான அரைசதமாகும். இதற்குமுன்னர், யூசுப் பதான் 15 பந்துகளின் அரைசதம் அடித்திருந்தார். அதுமட்டுமின்றி, முதன்முறையாக கொல்கத்தா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகண்டுள்ளது.
�,”