�
இந்தியாவில் தலைசிறந்து விளங்கும் ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) நிறுவனங்களில் எம்.பி.ஏ. படிப்பை முடித்தவர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர். ஐ.ஐ.எம்-ல் படித்தவர்களை உலகின் முன்னணி நிறுவனங்கள் உடனடியாக வேலைக்கு எடுக்கின்றன. இந்தியாவில் 13 இடங்களில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களை மத்திய அரசு நிறுவியுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் 20 ஐ.ஐ.எம். நிறுவனங்களில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் மாணவர்கள் படிப்பு முடித்து பட்டம் பெறுகின்றனர். ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு வரும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ‘ஆன்லைன்’ பதிவு செப்டம்பர் 20ஆம் தேதி வரை நடைபேறும். மேலும், விவரங்களை www.iimcat.ac.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்,ஐ.ஐ.எம். நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்கும்படி, நிறுவனங்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டது. எனவே, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.�,