தினப் பெட்டகம் – 10 (13.12.2018)
ஐஸ்லேண்ட் குறித்து சில தகவல்கள் :
1. ஐஸ்லேண்ட் நாட்டைச் சேர்ந்த குழந்தைகளை விரைக்கும் குளிரில் உறங்க வைப்பார்களாம். எந்த ஒரு காலநிலையாக இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வெளியில் உறங்க வைப்பார்கள்.
2. ஐஸ்லேண்டில் மக்களில் பெரும்பாலானோர் புத்தகப் புழுக்கள்தான். கிறிஸ்துமஸ் விழா சமயத்தில், நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியாகுமாம்! காரணம், கிறிஸ்துமஸுக்கு வழங்கப்படும் அதிகமான பரிசுகள் புத்தகங்கள்தான்.
3. 1989ஆம் ஆண்டு வரை, ஐஸ்லேண்டில் பீர் தடை செய்யப்பட்டிருந்ததாம்.
4. கி.பி. 930இல் உருவான ஐஸ்லேண்ட் நாட்டின் பார்லிமெண்ட் உலகில் மிகப் பழமையான பார்லிமெண்டுகளில் ஒன்றாகும்.
5. இந்நாட்டு மக்களுக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிரியமான உணவு!
6. ஐஸ்லேண்டில் கொசுக்களே கிடையாது. பூச்சிகளும் மிக மிகக் குறைவு.
7. ஆர்க்டிக் ஓநாய் (Arctic fox) மட்டுமே இந்நிலத்திற்குச் சொந்தமான விலங்காகும்.
8. இந்நாட்டில் காவலர்கள் யாரும் கையில் துப்பாக்கி கொண்டு செல்வது இல்லை.
9. ஐஸ்லேண்டில் எவ்விதமான புகைவண்டியும் கிடையாது!
10. ஐஸ்லேண்ட் மொழி இன்று வரை பிற மொழிக் கலப்பின்றி தனித்துவத்துடனே இருக்கிறது. 1500களில் அச்சடிக்கப்பட்ட முதல் பைபிளை இப்போதுள்ளவர்களும் எளிதாக வாசித்துவிடலாம்!
**- ஆஸிஃபா**
**முந்தைய பகுதி : [ரஜினி: என்றென்றும் சூப்பர் ஸ்டார்!](https://www.minnambalam.com/k/2018/12/12/37)**�,