ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர டென்மார்க் ஆதரவு தேவை: ஜெலன்ஸ்கி

Published On:

| By admin

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைன் நாடு விண்ணப்பித்துள்ளது. இதற்கு டென்மார்க் ஆதரவு தர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் 100 நாட்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போரை நிறுத்த பல நாடுகள் முயற்சி செய்தாலும், ரஷ்யா தனது தாக்குதல்களை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்து உக்ரைன் நாட்டுக்கு ஆதரவளித்து வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டுக்கு உணவு உதவிகள், ராணுவ உதவிகள் போன்றவற்றை உலக அளவில் பல நாடுகள் வழங்குகின்றன.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைன் நாடு விண்ணப்பித்துள்ளது. இதற்கு டென்மார்க் ஆதரவு தர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைன் நாட்டுக்கு, ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து டென்மார்க் ஆதரவளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுடன் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர வேட்பாளர் நிலையை வலுவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “உக்ரைன் தற்போது உள்ள சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது மிக சாதகமாக அமையும். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உரிமைக்கான பாதை இன்னும் நீண்ட காலம் எடுக்கும். இப்போது எல்லா நாடுகளின் உதவியும் உக்ரைனுக்கு அவசியமானது. மேலும் டென்மார்க்கின் ராணுவ உதவி உக்ரைனுக்கு அவசியமானது” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உக்ரைனைப் பரிந்துரைக்க தயங்கும் நாடுகளில் டென்மார்க்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share