ஐந்து நீதிபதிகள் நியமனம்: வழக்கறிஞர்கள் போராட்டம் வெற்றி !

public

வழக்கறிஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்றத்துக்குப் புதிதாக ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலுள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களைக் காட்டிலும் கர்நாடக உயர் நீதிமன்றம்தான் குறைந்தபட்ச நீதிபதிகளோடு இயங்கிவருகிறது. 62 நீதிபதிகள் பணியாற்ற வேண்டிய நிலையில் வெறும் 24 பேர் மட்டுமே இப்போது பணிபுரிகின்றனர். இதிலும் 8 பேர் குல்பர்கா, தார்வாட் அமர்வுகளில் பணியாற்றுகின்றனர். அதாவது மொத்த நீதிபதிப் பணியிடங்களில் 38.7% மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.

எனவே நீதிபதிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞர்களான பி.வி. ஆச்சார்யா, அசோக் ஹரனஹள்ளி, மூத்த வழக்கறிஞர் ரவிவர்மா குமார் உட்பட மூத்த சட்ட ஆலோசகர்களும் வழக்கறிஞர்களும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று எச்சரித்திருந்தனர்.

இவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்துக்குப் புதிதாக ஐந்து நீதிபதிகளை நியமித்து சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீட்சித் கிருஷ்ணா ஷிராபத், ஷங்கர் கணபதி பண்டிட், ராமகிருஷ்ணா தேவதாஸ், போத்தன்ஹோசூர் மல்லிகார்ஜுனா ஷ்யாம் பிரசாத், சுனில் தத் யாதவ் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கர்நாடகா, கொல்கத்தா உயர் நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் 19 பேரின் பெயர்ப் பட்டியல் கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதில் 5 பேர் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தீட்சித் கிருஷ்ணா ஷிராபத் , இந்திய – கர்நாடக உதவி சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றிவருகிறார். ராமகிருஷ்ண தேவதாஸ் மாநில அரசின் முதன்மை வழக்கறிஞராக இருந்துவருகிறார். நந்தி உள்கட்டமைப்பு காரிடார் என்டர்பிரைசஸ் தொடர்பான வழக்குகளுக்குச் சிறப்பு ஆலோசகராக சுனில் தத் பணியாற்றிவந்தார். பண்டிட் கல்வி சம்பந்தமான வழக்குகளுக்கு ஆஜராகி வாதாடியுள்ளார். ஷியாம் பிரசாத் நியமிக்கப்பட்ட மூத்த ஆலோசகர் ஆவார்.

இவர்களின் நியமனத்திற்குப் பின்னரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 32 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *