ஐந்தாயிரம் வாங்கிய கூட்டுறவு சங்கத்தலைவர் கைது!

Published On:

| By Balaji

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை மட்டும்தான், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் கைதுசெய்வார்கள் என்பது இல்லை, லஞ்சம் வாங்கும் மக்கள் பிரதிநிதிகளையும் கைது செய்யலாம் என்றும், குறிப்பாக ஆளும் கட்சி நியமிக்கும் வாரியத் தலைவர், கூட்டுறவு சங்கத் தலைவர்களையும் கைது செய்யலாம் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் நாட்ரம்பள்ளி அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளரும், நாட்ரம்பள்ளி தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் இளோங்கோவனை 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதில் தைரியமாக கைது செய்துள்ளார், வேலூர் விசிலன்ஸ் ஏ.டி.எஸ்.பி.பாலசுப்பிரமணியன்.

வேலூர் மாவட்டம், நாட்ரம்பள்ளி ஜங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவர் குழு கடன் கேட்டுள்ளார், நாட்ராம்பள்ளி தொடக்க வேளானமை கூட்டுறவு கடன் சங்கத்தில், 60 ஆயிரம் வழங்குவதற்கு சங்கத்தலைவர் இளோங்கோ லஞ்சமாக 6 ஆயிரம் கேட்டுள்ளார், இதுதொடர்பாக இருவரும் பேரம்பேசி, கடைசியாக 5 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாக முடிவானது.

60 ஆயிரம் கடன் வாங்க 6 ஆயிரம் லஞ்சம் கேட்பதோடு, வட்டிவேறு கட்டவேண்டும் என்று சொல்கிறார்களே என்ற மனவேதனையில், வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகம் சென்றவர், ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியனை சந்தித்து ஆதாரங்களை காண்பித்து, தயவு செய்து அந்த தலைவரை பிடித்துபோடுங்கள் சார், அவனுக்கு மந்திரி, எம்.எல்.ஏ,கள் என்று பேசுவாங்க பயந்து விடாதிங்க சார் என்று எதார்த்தமாக சொல்ல, “ பாலசுப்பிரமணியன் சிரித்தபடி புகார் வாங்கி பதிவு செய்துவிட்டு, முழுமையாக விசாரணை செய்த பிறகு, கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார், சிவாவிடம் ரசாயன பவுடர் தடவிய புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இரண்டு, 500 ரூபாய் நோட்டுகள் இரண்டு கொடுத்து அனுப்பினார்,

பின்னால் வழக்கமாக அப்பாவிகள் போல் போனார்கள் விசிலன்ஸ் போலீஸார் பாலசுப்பிரமணியன் தலைமையில். நாட்ரம்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத்தில் காத்திருந்த தலைவர் இளோங்கோ, சிவாவை பார்த்து என்னப்பா இவ்வளவு நேரம், என்று கோபமாக பேச, அதற்கு சிவா நீங்கள் கேட்ட 5 ஆயிரம் என்று போலிசார் கொடுத்த நோட்டை கொடுக்க, என்னயா இது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று வாங்கி பார்த்துக்கொண்டேயிருக்க, ஆப்ரேஷனுக்கு காத்திருந்த லஞ்சம் ஒழிப்பு போலீஸார் ஓடிவந்து இளோங்கோவை தூக்கிகொண்டு ஒரு அறைக்குள்போனார்கள்,

இரண்டு மணிநேரம் பிறகு ரெக்கார்டு ஒர்க் முடித்துவிட்டு கைது செய்து வேலூர் கொண்டு போனார்கள், இருப்பினும் லஞ்சபேர்வழியான நாட்ரம்பள்ளி தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கடைசிவரை நம்பிக்கையில் இருந்தாராம் மந்திரி, எம்.எல்.ஏ,க்கள் தன்னைக் காப்பாற்றுவார்கள் என்று. ஆனால், எந்த போனையும் இந்த போலீஸ் அதிகாரி எடுக்கமாட்டார் என்பது லோக்கல் அரசியல்வாதிகளுக்கு தெரியுமாம்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share