ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி திஸ் இஸ் இட்” என்ற பெயரில் இசைத் திரைப்படமாக வெளியானது. அதை போன்ற ஒரு இசைத் திரைப்படம் ஏ.ஆர்.ரஹமான் அமெரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
“ஒன் ஹார்ட்” என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைத் திரைப்படத்தில் அமெரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹமான் தலைமையிலான இசை சுற்றுபயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இடம்பெற்றன. திரையுலகில் தனது 25ம் ஆண்டில் அடியேடுத்து வைப்பதின் நினைவாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள “ஒன் ஹார்ட்” இசைத்திரைப்படம் பிப்ரவரி 5ம் தேதி கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
உலகமெங்கும் ஏப்ரல் மாதம் “ஒன் ஹார்ட்” இசைத்திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
[One Heart](https://www.youtube.com/watch?v=-0dc2EU_3Xs)
�,”