ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக சான்ஸ் கேட்டு, பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வீட் செய்திருப்பது திரைத்துறையினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கமாண்டோ, எக்ஸ்-மெந்தி லாஸ் ஸ்டாண்ட், பிரிடேட்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பில் டியூக். மேலும், இவர் ‘தி ட்விலைட் ஜோன்’, ‘அமெரிக்கன் பிளேஹவுஸ்’ போன்ற பிரபல அமெரிக்க சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படம், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படத்தில் நிவேதா தாமஸ், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘தர்பார்’ திரைப்படத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் பில் டியூக் வாய்ப்புக் கேட்டு ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், “முருகதாஸ், எனக்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால், ரஜினியின் நீண்ட கால நண்பனாகவோ, அமெரிக்க உறவினராகவோ, நயன்தாராவின் அங்கிளாகவோ நான் நடிக்க முடியும் என நினைக்கிறேன். ஸ்ரீகர் பிரசாத், சந்தோஷ் சிவன் என்னை எடிட் செய்யலாம், அனிருத் எனக்கு ஒரு ஹிட் சாங் கொடுக்க முடியும், நீங்கள் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்” என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சான்ஸ் கேட்டுள்ளார்.
பில் டியூக்கின் இந்த ட்வீட்டை நம்ப முடியாத முருகதாஸ், ‘சார் இது நிஜமாவே நீங்க தானா?’ என்று கேட்டார். அதற்கு‘ஆமாம் சார். நானும் எனது டீமும் உங்கள் வேலையின் தீவிர ரசிகர்கள். எனக்கு இப்போ 76 வயதாகிறது. நிக்கோலஸ் கேஜுடன் ‘தி மூவி மேண்டி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் இணைந்து பணியாற்றலாம்’ என பில் டியூக் கூறியுள்ளார்.
இவர் ஏற்கனவே, மகேஷ்பாபுவின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின்போது, ‘ஒரு சர்வதேச ஸ்பை த்ரில்லர் படத்தில் இணைந்து பணியாற்றலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது சொல்லுங்கள், சேர்ந்து உணவு அருந்தலாம்’ எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பில் டியூக்கின் இந்த ட்வீட் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[பசங்கதான் பொண்ணுங்கள தெரிஞ்சிக்கணும்: அஜித்](https://minnambalam.com/k/2019/06/13/70)**
�,”