ஏவுகணை சோதனைகளில் வட கொரியா முன்னேறி வருகிறது: தென் கொரியா

public

ஏவுகணை சோதனைகளில் எதிர்பார்த்ததைவிட வட கொரியா முன்னேறி வருகிறது என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் மற்றும் ஐ.நா. கவுன்சிலும் தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்தும் வட கொரியா அணுகுண்டு சோதனைகளைத் தற்காப்பு என்று கூறி தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

இந்நிலையில், வட கொரியா கடந்த மே 14ஆம் தேதி சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையை நடத்தியது. இது புதுவிதமான ஏவுகணை. இந்த ஏவுகணை 700 கிலோ மீட்டர் பாய்ந்து செல்லும் திறனுடையது. இது போன்ற ஏவுகணை சோதனைகளை வட கொரியா எந்த நேரந்திலும், எந்த இடத்திலும் நடத்தும் என அந்நாட்டின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டது. வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.

வட கொரியாவின் ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய செயல் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் வட கொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் குறித்து மே 16ஆம் தேதி தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஏவுகணை சோதனைகளில் எதிர்பார்த்ததை விட வட கொரியா முன்னேறி வருகிறது. இது தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக வட கொரியா உருவாகியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரிய தீபகற்ப பகுதியில் வட கொரியாவின் தொடர் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா, அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்தன. எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்காவை குண்டு வீசி தாக்குவோம் என்று வெளிப்படையாகவே மிரட்டி வந்தது. வட கொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், அதை சமாளிக்க பசிபிப் பகுதியில் அமெரிக்கா பாதுகாப்பு கவண் ஒன்றை அமைத்தது. அதுமட்டுமல்லாமல் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *