{ஏழைகளுக்காக பாஜக தொடர்ந்து பணியாற்றும் : மோடி

public

ஏழைகளுக்காக பாரதிய ஜனதா தொடர்ந்து பணியாற்றும் என, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாஜக தொடங்கப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. அதன் 37ஆவது ஆண்டு விழா இன்று அக்கட்சியினாரால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1951ஆம் ஆண்டு இந்து தேசியத்தை வளர்ப்பதற்காக சியாம பிரசாத் முகர்ஜி என்பவரால் பாரதிய ஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதுதான் பின்னாட்களில் பாஜக-வானது. பின்னர், 1967ஆம் ஆண்டு இந்து தேசியம் பேசும் பல கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சி ஆரம்பித்தனர்.மீண்டும் அதிலிருந்து பிரிந்துவந்த தலைவர்கள் ஒன்றுகூடி 1980ஆம் ஆண்டு பாஜக-வை தொடங்கினர். அதன் முதல் தலைவராக வாஜ்பாய் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் 37ஆம் ஆண்டு தொடக்க விழா ஏப்ரல் 6ஆம் தேதி டெல்லியிலுள்ள பாஜக அலுவலகத்தில் கொண்டப்பட்டு வருகிறது.37வது ஆண்டு விழாவையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘பாஜக நாட்டுக்காகவும், நாட்டிலுள்ள ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றும். சமூகத்துக்காக பணியாற்ற ஒவ்வொரு செங்கல்லாக வைத்து கட்டப்பட்டுள்ள பாஜக பணியாளர்களின் கடின உழைப்பை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து சமூகத்தினரும் பாஜக-வின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா முழுவதுமுள்ள பாஜக தொண்டர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.