ஏர் இந்தியாவுக்கு பிரதமர் அலுவலகம் கடன்பாக்கி!

Published On:

| By Balaji

இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம் மற்றும் சில முக்கிய அரசு அதிகாரிகள் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் ரூ.600 கோடி வரையில் பாக்கி வைத்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

பொதுத் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, நீண்ட காலமாகவே கடுமையான நிதி நெருக்கடியாலும் கடன் சுமையாலும் தவித்து வருகிறது. ஏர் இந்தியாவின் பங்குகள் மற்றும் சொத்துகளை விற்பனை செய்து நிதி திரட்டும் முயற்சியும் தோல்வியில் முடிந்ததால் கடுமையான நெருக்கடியில் ஏர் இந்தியா உள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவுக்குச் செலுத்த வேண்டிய தொகையை அரசு அலுவலகங்களும் அதிகாரிகளும் செலுத்தாமல் இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஏர் இந்தியா தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ள விவரங்களின்படி, மார்ச் 31 வரையில் ஏர் இந்தியாவுக்கு ரூ.598.55 கோடி பாக்கித் தொகை நிலுவையில் உள்ளது. இதில் பாதி அளவு பிரதமர் அலுவலகம் தரப்பிலிருந்து வழங்கவேண்டிய தொகையாகும். அதாவது பிரதமர் அலுவலகம் ஏர் இந்தியாவுக்கு ரூ.297.08 கோடியைப் பாக்கி வைத்துள்ளது. 2008ஆம் ஆண்டிலிருந்தே பாக்கித் தொகை நிலுவையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட வேண்டிய தொகை 2017 மார்ச் 31 வரையில் ரூ.513.27 கோடியாக இருந்துள்ளது.

பிரதமரின் விமானப் பயணம், விமானங்கள் பராமரிப்பு ஆகியவற்றுக்கான பாக்கித் தொகை அதிகமாக நிலுவையில் உள்ளது. பிரதமரின் விமானங்களை மத்திய அமைச்சரவைச் செயலாளர்தான் கையாளுவார். இதற்கான தொகையில் வெறும் 37 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.297.08 கோடி இன்னும் நிலுவையில் இருக்கிறது. அதிகபட்சமாக 2018 ஜூலை தேதியிடப்பட்ட ரசீதில் ரூ.203.54 கோடி பாக்கி இருக்கிறது.

இந்தியக் குடியரசுத் தலைவரின் விமானப் பயணங்களைக் கையாளும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஏர் இந்தியாவுக்கு ரூ.212.19 கோடி பாக்கி வைத்துள்ளது. அதாவது மொத்தத் தொகையில் இதுவரையில் 70 சதவிகிதம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. துணைக் குடியரசுத் தலைவரின் விமானப் பயணங்களைக் கையாளும் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏர் இந்தியாவுக்கு ரூ.66.94 கோடி பாக்கி வைத்துள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)

**

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share