`ஏர்டெல் : 20 லட்சம் வங்கிக் கணக்குகள்!

public

%

அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதத்திலேயே ஏர்டெல் பேமெண்ட் வங்கியில், இதுவரையில் 20 லட்சம் பேர் வங்கிக் கணக்கை தொடங்கியிருப்பதாக அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையில் சேமிக்கும் வசதியுடன் தொடங்கப்பட்டதுதான் பேமெண்ட் பேங்க். இந்த பேமெண்ட் பேங்க் சேவையை தொடங்குவதற்கான ஒப்புதல் பெற்ற 11 இந்திய நிறுவனங்களில் முன்னோடியாக ஏர்டெல் நிறுவனம், தனது பேமெண்ட் பேங்க் சேவையை ஜெய்ப்பூரில் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கிது. அதைத் தொடர்ந்து, இவ்வங்கியின் செயல்பாடுகள் கடந்த ஜனவரி மாதத்தில் தொடங்கியது. இந்நிலையில், தொடங்கப்பட்ட ஒரே மாதத்தில் ஏர்டெல் பேமெண்ட் வங்கியில் சுமார் 20 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஏர்டெல் பேமெண்ட் வங்கியின் நிர்வாக இயக்குநரான ஷாஷி கூறுகையில், ‘செயல்பாடுகளைத் தொடங்கி ஒரே மாதத்தில் 20 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறோம். கிராமப்புறங்களிலிருந்து அதிகளவிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது, எங்களது வாடிக்கையாளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் கிராமப்புற வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்’ என்று கூறினார். ஏர்டெல் பேமெண்ட் வங்கியானது ஏர்டெல் மற்றும் கோடாக் மஹிந்திரா வங்கி ஆகியவை இணைந்து 80:20 என்ற பங்கு விகிதத்தில் தொடங்கப்பட்ட கூட்டு நிறுவனமாகும். இதன் செயல்பாடுகளுக்காக முதற்கட்டமாக ரூ.3,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0