எஸ்.ஆர்.எம்.பல்கலை கழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
காட்டாங்கொளத்தூர் அருகே பொத்தேரியில் எஸ்.ஆர்.எம் பல்கலை இயங்கி வருகிறது. இப்பல்கலையில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மே 26ஆம் தேதி பொன்னேரியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகள் அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து மே 27ஆம் தேதியே ஜார்கண்டைச் சேர்ந்த அனிஷ் சவுத்ரி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த மாணவர்கள் படிப்பில் பின் தங்கியிருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கல்லூரி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இச்சம்பவங்கள் குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த சூழலில் ஜூலை 15ஆம் தேதி கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ், பி.டெக் இறுதியாண்டு மாணவர் பல்கலையில் உள்ள டெக்பார்க் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இரண்டு மாதங்களில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து மறைமலை நகர் போலீசார், பல்கலை ஆசிரியர்கள், மாணவர்களின் நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சூழலில் மாணவர்களின் தற்கொலை வழக்கைத் தமிழக டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மர்மமாக இருக்கும் மாணவர்களின் தற்கொலைகளுக்கான காரணம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”