எய்ம்ஸ் மருத்துவமனையில் லிப்ட் அறுந்து விபத்து!

Published On:

| By Balaji

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லிப்ட் அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மத்திய அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 3) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக அலுவலகத்தில் இயங்கிவரும் மின்தூக்கி காலை 11.45 மணியளவில் இரண்டாம் தளத்திலிருந்து திடீரென அறுந்துவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மின்தூக்கி இயக்குபவர் உள்பட ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்களில் இரண்டு பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மின்தூக்கியைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

எய்ம்ஸ் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களும் நோயாளிகளும் வந்துசெல்லும் எய்ம்ஸ் மருத்துமவமனை வளாகத்தில் இதுபோன்று நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share