எய்ம்ஸ் இடம் தேர்வு செய்யப்படவில்லை: ஜே.பி.நட்டா

public

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 6) நடைபெறுகிறது. தமிழகத்தில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், இதற்காகத் தமிழக அரசு பரிந்துரைத்த இடங்கள் பரிசீலனையில் உள்ளன எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காகத் தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, காஞ்சீபுரம் ஆகிய 5 இடங்களை மத்திய அரசிடம் மாநில அரசு பரிந்துரைத்திருந்தது. 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த 5 இடங்களிலும் மத்தியக் குழு ஆய்வு செய்தது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எந்த நடவடிக்கையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படுவது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. அதில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை 2017 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு (2017) ஆகஸ்ட் மாதத்திலேயே நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நீதிமன்றம் கொடுத்த தேதி முடிவடைந்த நிலையில், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. இதனால் கே.கே.ரமேஷ் என்பவர், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் பிரீதி சுதன் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தைத் தேர்வு செய்வது நீண்ட நடைமுறை என்பதால், மேலும் 3 மாதங்கள் அவகாசம் வேண்டும்” என்று மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0