எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு எவ்வளவு செலவானது?

Published On:

| By Balaji

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவுக்காகத் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களுக்கு ரூ.6.88 கோடி செலவிடப்பட்டதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் அவரது அரசியல் வாழ்க்கை பற்றியும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 2017-18 ஆண்டுகளில் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இந்த விழா கொண்டாடப்பட்டது. 2017 ஜூன் மாதம் 30ஆம் தேதி மதுரையில் தொடங்கிய இந்த விழாவானது திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், திருச்சி, தேனி என்று வரிசையாக அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இதன் நிறைவு விழா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் செப்டம்பர் 30ஆம் தேதி நடத்தப்பட்டது. இக்கொண்டாட்டங்களுக்காக அரசு தரப்பில் எவ்வளவு செலவிடப்பட்டது என்ற விவரம் தற்போது கிடைத்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.ஹக்கிம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்காக மொத்தம் எவ்வளவு செலவானது என்றும், மாவட்ட வாரியான செலவு விவரங்களை வழங்கும்படியும் கேட்டிருந்தார். அதன்படி, முதல் விழா மதுரையில் 2017 ஜூன் மாதம் மதுரையில் தொடங்கியது. இதற்காக மட்டும் மொத்தம் ரூ.48.73 லட்சம் செலவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்காக ரூ.6.88 கோடி செலவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.13.82 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கரூரில் ரூ.13.99 லட்சம் செலவாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு மிக அதிகமாக ரூ.1.99 கோடி செலவிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களிலேயே சென்னையில்தான் மிக அதிகமாகச் செலவாகியுள்ளது. முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ரூ.25 லட்சமும், துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் ரூ.18.46 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share