நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த ஹெச்.வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதைத் தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார்.
இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் நேற்று (மே 26) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வசந்தகுமார் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவை உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வது என்றும், நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவைத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மூலமும், திமுக தலைவர் ஸ்டாலின் மூலமும் தெரிவிக்க விரும்புகிறேன்.
சட்டரீதியாகப் பார்த்தால் 14 நாட்களுக்குள் என்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, நான் நாளை ராஜினாமா செய்ய உள்ளேன். சபாநாயகரைப் பார்த்துவிட்டால் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு உடனே டெல்லிக்குச் செல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
வசந்தகுமார் ராஜினாமா செய்யவுள்ளதன் மூலம் சட்டமன்றத்தில் திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 110இல் இருந்து 109 ஆக குறையும். அத்தோடு தமிழகத்தில் மீண்டும் ஓர் இடைத் தேர்தல் நாங்குநேரியில் நடக்கவுள்ளது. இடைத் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் அங்கு மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவாரா அல்லது திமுக தனது வேட்பாளரை நிறுத்துமா என்பது தெரியவரும்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.
�,”