என் தந்தை எனக்கு சொல்லிக் கொடுத்தவை: ராஜீவ் பற்றி ராகுல்

Published On:

| By Balaji

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி.

இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி. “என் தந்தை நாகரிகமானவர், கனிவானவர், அன்பானவர். அவர் அன்பையும், மரியாதை கொடுக்கும் பண்பையுமே எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். யாரையும் வெறுக்கச் சொல்லவில்லை. மன்னிக்கவே கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன் தந்தை ராஜீவ் காந்தியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘என் ஹீரோ என் அப்பா’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராஜீவ் காந்தியை நம்பர் ஒன் ஊழல்வாதி என்று விமர்சித்த பிரதமர் மோடி இன்று தனது ட்விட்டரில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அவரது நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

. **

[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)

**

.

.

**

[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)

**

.

**

[சென்னை: மனிதப் பிழையால் உருவான தண்ணீர்ப் பஞ்சம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/9)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share