கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள என்.எல்.சி. என்றழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்கு நிலம், வீடு, இடம் கொடுத்தவர்களுக்கு, ஒப்பந்தத் தொழிலாளியாக வேலைவாய்ப்பு கொடுத்தார்கள். அதில், இன்னும் பலருக்கு வேலைக் கொடுக்கப்படாமலும் உள்ளது.
முதற்கட்டமாக ஒப்பந்தத் தொழிலாளிகளாகச் சேர்க்கப்படும் தொழிலாளிகள் சிறிது காலத்துக்குப்பிறகு, பணி நிரந்தரம் செய்யப்படுவது வழக்கம். தற்போது சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளிகள் குறைவான சம்பளத்துக்கு வேலை செய்துவரும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பணி நாள்களை மாதமொன்றுக்கு 26 ஷிப்ட்டிலிருந்து 19 ஷிப்ட்டாக குறைத்துள்ளார்கள்
ஷிப்ட் நேரம் குறைக்கப்படுவதால், பணி நிரந்தரம் செய்வதில் சட்ட சிக்கல்கள் ஏற்படும் என்பதால், ஒப்பந்தத் தொழிலாளிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள் என்ற செய்தியை நமது மின்னம்பலம்.காம் தமிழ் மொபைல் பத்திரிகையில் நேற்று முன்தினம் ஜூலை 17ஆம் தேதி மாலை 7.00 மணி செய்தியில், [தவிக்கும் என்.எல்.சி. தொழிலாளிகள்](https://www.minnambalam.com/k/2017/07/17/1500295189) என்ற தலைப்பில், வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதையடுத்து, திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், ஜூலை 17ஆம் தேதி இரவு முக்கிய எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கொறடாவிடம், என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்னையை, ஜூலை 18ஆம் தேதி, சபாநாயகரைச் சந்தித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவதற்குக் கடிதம் கொடுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பேரில், நேற்று சட்டசபையில் சபாநாயகரைச் சந்தித்து கவனஈர்ப்பு தீர்மானத்துக்குக் கடிதம் கொடுத்துள்ளார்கள் திமுக எம்.எல்.ஏ-க்கள்.�,