என்னை பாத்து ஏன்யா அந்த கேள்வி கேட்ட? – அப்டேட் குமாரு

public

என் ராசாவின் மனசிலே படத்துல ‘அது என்ன சோறு இல்லைன்னு நீ சொல்றது. நான் சொல்றேன் சோறு இல்லை போடா’ன்னு கவுண்டர் மகான் சொல்வார். அந்தமாதிரி, ஏர்செல் காலியாகிட்டுன்னு எல்லாரும் சொன்னப்ப, அதெல்லாம் இல்லைன்னுட்டு, இன்னைக்கு போய் திவாலாகிட்டோம்னு அறிவிச்சிருங்க சாமின்னு மனு கொடுத்துட்டு நிக்குறாங்க. ஒரு கம்பெனி மூடுனா எல்லாமே முடிஞ்ச மாதிரி அலட்டிக்கிறீங்களேப்பான்னு வாட்ஸப் குரூப்ல டிவி ரிப்போர்ட்டர் ஒருத்தர் கேட்டாப்ல. இவங்க கடன் வாங்குன பேங்க் எல்லாம் சர்வீஸ் சார்ஜ், சொரண்டுன சார்ஜுனு நம்ம உண்டியலைத் தான உடைப்பாங்கன்னு கேட்டா, எல்லாம் லா படிதான் தம்பி நடக்கும். யூ டோண்ட் வொர்ரின்றார். எதுதான் சார் இங்க லா படி நடக்குதுன்னு கேள்வி கேட்டா, என்னை கேள்வி கேக்க உனக்கென்ன குவாலிபிகேசன் இருக்குனு எகிற ஆரம்பிச்சிட்டார். அப்பறம் கேள்வி கேக்க தகுதியெல்லாம் வேணாம், அறிவு இருந்தா போதும். பதில் சொல்லவும் அதே அறிவு இருந்தா போதும்னு சொல்லி புரிய வைக்குறதுக்குள்ள ஸ்ரீதேவி இறுதி ஊர்வலமே முடிஞ்சு போச்சு. நான் போய் அஞ்சலி செலுத்திட்டு வர்றதுக்குள்ள படிச்சு முடிச்சிருங்க. கொஸ்டின் கேப்பேன்.

**Thalapathy Bharani**

ஏன்டா ஸ்ரீதேவிக்கு தேசிய கொடி போர்த்தினிங்க கேட்டா

மயில் தானே தேசிய பறவைனு சொல்றான்

**Sathiya Kumar S**

உண்மையான ஒரு துளி கண்ணீர்…. ஆயிரம் போலி நகைப்புகளை தோற்கடித்து விடும்….. யாருக்காக இந்த முகமுடி….. நல்லமனிதனாக வாய்விட்டு கதறி அழுங்கள்……

**Puli Arasan**

எதிரியாக இருந்தாலும் ஒருவரின் இறப்பை கொண்டாடுவது நாகரிகமற்ற செயல் இல்லையானு ஒருத்தர் கேட்டார்.

ஆமாங்க இனிமே தீபாவளி கொண்டாடாதீங்க’ன்னு சொன்னேன்

பேயாம போயிட்டார்

**Bavi Thilaga Chandran**

சாமி சாவாது .

Ritu.

அப்ப பொறக்கவும் கூடாதுல.

அதா அது வந்து!!!

**Thippu Sulthan K**

ஸ்ரீதேவி-யின் இறுதி ஊர்வலம் தொடங்கியது பிற்பகல் 3.30 மணிக்கு அரசு மரியாதையுடன் தகனம்

கொடிய அர கம்பத்துல பறக்க உடலை .

**Sathiya Kumar S**

இங்கு யவனும் யோக்கியனில்லை….. பிறப்பைதேடி… கருமுட்டையில் உன் இலக்கை அடைய எத்துனை உயிர்களை புறந்தள்ளினாய்……

**Sathish Kumar**

எல்லோரும் முதல்வர் ஆகவே கட்சியை தொடங்குகிறார்கள்.-ஸ்டாலின்

பின்ன, எல்லாரும் உங்கள மாதிரி ஆகாமயே இருப்பாங்களா டூட்

**காளையன்..**

மகிழ்ச்சியாக

நீந்தி கொண்டிருந்திருக்கலாம்..

தூண்டில் புழுவுக்கு

ஆசைப்படாமலிருந்தால்??..

**முகிலன்™**

பதில் வணக்கம் தராத அளவிற்கு ஒருவர் வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறார் என்றால் அவர் உண்மையிலேயே பெரிய அப்பாடக்கரா தான் இருக்கும்.!

**கோழியின் கிறுக்கல்!!**

பணியின் போது சீருடை அணிவதே அடிமைத்தனத்தின் மிச்சம் தான்!!

**யாழினி♡†Ѧℓкs**

கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும் “திதியும்”

இறந்த பின் அரசாங்கம் தரும் “நிதியும்” பயனற்றது..

**Srinivasan Rahul**

சி.வி. ராமன் அவர்கள் 1930ல் தனது ஒளிச்சிதறள் கோட்பாட்டிற்காக(Raman effect) இயற்பியலில் நோபல் பரிசை வென்றார்

முழுமையாக இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் இவரே

**திவாகரன்**

தமிழ்நாட்டில் பிறந்து நோபல் பரிசு வென்ற C.V.ராமன் அவர்களின் கண்டுப்பிடிப்பான Raman Effectன் நினைவாகவே இன்று அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.!

**Netsurf பாலன்**

Jio ல எல்லாத்தையு இலவசமா குடுத்ததே இருக்கிற எல்லா நெட் ஒர்க்கயு ஒழிச்சு கட்டிட்டு தான் மட்டுமே ராஜ்ஜியம் நடத்தனும்கிறதுதான்….

தொலை நோக்குப்பார்வை……

முதல் பலி ஏர்செல்……

**மணிமாறன்**

பால பெரியவா பதவிக்கு தேர்தல் அறிவித்தால் நிச்சயமாகப் போட்டியிடுவேன் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

**மணிமாறன்**

சங்கராச்சாரி உடலைக் கொடுத்தால் நல்லபடியாக அடக்கம் செய்வோம் – பாலேஸ்வரம் முதியோர் இல்ல காப்பாளர் தாமஸ்

**அன்புடன் கதிர்**

நாமா இங்க பலரை கழுவி ஊத்துறோம் !!!

நாம செல்லை நோண்டிட்டே இருக்கோம் னு வீட்ல கழுவி ஊத்துறாங்க !!!

**ஏகே ராஜ்**

சிந்திக்காத மனிதன் தனக்கு மட்டும் துரோகம் செய்வதில்லை…

மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்…

**சி.பி.செந்தில்குமார்**

தலைவரே!உங்களுக்கு சோதனைமேல் சோதனை,வந்திருக்கு

எப்டி?

இறுதி”ஊர்வலத்தில் கலந்துக்க மாட்டேன்னு நீங்க சொன்ன நாள்ல இருந்து டெய்லி ஒரு விஐபி செத்துட்டு இருக்காங்க.

**வாட்ஸப்**

மனைவி :

பக்கத்து வீட்டுக்காரர் அடிக்கடி மனைவிய வெளியில கூட்டிட்டு போறார்.

நீங்களும்தான் இருக்கீங்களே வேஸ்ட்

கணவன்:

துபாய்க்கு வர்றியா?

-லாக் ஆஃப்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0