என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்: பார்வதி பகிரங்கம்!

Published On:

| By Balaji

பார்வதி திறமையான நடிகை என்று பெயரெடுத்தவர். சமீபத்தில் வந்துள்ள மலையாள படமான ‘டேக் ஆப்’ திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களாலும், திரைத்துறையினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களில் நடித்தவர் பார்வதி. வித்தியாசமான கதாபாத்திரங்களையும், கதைகளையும் தேர்வு செய்து நடிப்பார். பெரிய நடிகர் படம் என்றாலும் கதாபாத்திரம் பிடித்திருந்தால்தான் நடிப்பார். அதனால் சவால் நிறைந்த கதாபாத்திரம் என்றால் தமிழ் படங்களில் ‘உடனே பார்வதிக்கு போன் போடுங்க’ என்று சொல்வதை பல டிஸ்கஷன்களில் சொல்லுவார்கள். மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழில் தனது நடிப்பால் உரிய கவனத்தை பெற்றிருக்கிறார். தமிழும் பார்வதிக்கு நன்றாக பேச தெரியும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இத்தனை திறமையுள்ள பார்வதியின் அறிமுக நாள்களில் மலையாளத்தில் அவரிடம் சில மூத்த நடிகர்கள், இயக்குநர்கள் வாய்ப்பு தர வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என்று கேட்டதாகவும், ஆனால் நான் மறுத்துவிட்டதால் இப்போது யாரும் அப்படி கேட்பதில்லை. இது திரையுலகில் இருக்கும் கசப்பான உண்மை. அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்று மலையாள தொலைக்காட்சி தொகுப்பாளர் மாதுகுட்டிக்கு அளித்த 50 நிமிடப் பேட்டியில் பகிரங்கமாக பேசியுள்ளார்.

மேலும் அந்த தொலைக்காட்சி பேட்டியில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார் பார்வதி. ‘படுக்கைக்கு போய் தான் வாய்ப்பு கிடைக்கும் என்றால் சினிமாவில் நடிக்காமல் வேறு வேலையை பார்த்து போய்விடலாம். தூங்கும்போது மனநிம்மதியாக எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இருந்தால் அதுவே நல்ல வாழ்க்கை என்பேன். நான் கொஞ்சம் சென்சிடிவ் தான். அன்போ, கோபமோ உடனடியாக காட்டிவிடுவேன். நான் பெண்ணியத்தை கடைபிடிப்பவள் தான். யாருக்கும் பயந்து பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. தொடர்ச்சியாக படங்கள் எண்ணிக்கைக்காக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கதையும், டீமும் நம்பிக்கையாக இருந்தால் மட்டுமே ஒரு படத்தை ஒப்புக்கொள்கிறேன்’ என்று பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் பார்வதி.

மேலும், ‘மலையாள திரையுலகில் என்னை படுக்கைக்கு அழைத்து நான் மறுத்துள்ளது நடந்துள்ளது. தமிழில் படங்கள் நடித்துள்ளேன். அங்கு யாரும் இப்படி கேட்டதில்லை. கன்னடத்திலும் ஒரு படம் நடித்துள்ளேன். அங்கும் எந்த பிரச்னையும் இல்லை. மலையாளத்தில் சில மூத்த நடிகர்களும், இயக்குநர்கள் சிலரும் இந்த விஷயத்தை தங்களது உரிமையாக நினைத்து நடிக்க வரும் பெண்களிடம் கேட்பது தவறான விஷயம்’ என்று துணிந்து பேசியுள்ளார் பார்வதி.

[பார்வதி கொடுத்த தொலைக்காட்சி நேர்காணலின் லிங்க்…](https://www.youtube.com/watch?v=uL21yqur308&t=81s)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel