நாதுராம் கோட்சே குறித்து நான் பேசியது தவறான கருத்து ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த 12ஆம் தேதி அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியிருந்தார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்துக் காவல் நிலையங்களில் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இந்தச் சூழலில் நேற்று இரவு வேலாயுதம்பாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமலை நோக்கிச் செருப்பு, முட்டை போன்றவை வீசப்பட்டன. முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் கரூர் ஒன்றிய பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர்.
இந்நிலையில் இன்று (மே 17) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், “நாதுராம் கோட்சே குறித்த தனது கருத்தில் தவறில்லை. மக்களவைத் தேர்தலின் கடைசி நாள் பிரச்சாரத்தின்போது மெரினாவில் இதே கருத்தை நான் பேசியிருக்கிறேன். அங்கு எல்லா மதத்தவரும் இருந்தனர். அப்போது தன்னம்பிக்கை இருந்தவர்களுக்கு, இன்று நம்பிக்கை குறைந்தவுடன், எது கிடைக்கிறதோ அதை பிடித்துக்கொண்டு விவாதம் செய்துகொண்டிருக்கின்றனர் என்று பாஜகவை மறைமுகமாகச் சாடினார். எனது பேச்சால் சமூகப் பதற்றம் உருவாகவில்லை, அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
கைது நடவடிக்கைக்காக நான் அஞ்சவில்லை. பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் முன் ஜாமீன் கோரினேன். என்னைக் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும். என்னைக் கைது செய்யாமல் இருப்பது நல்லது. இது என்னுடைய வேண்டுகோள் இல்லை. அறிவுரை. பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும். தீவிரவாதம் எல்லா மதத்திலும் இருக்கிறது என்றார்.
தனக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதவில்லை எனத் தெரிவித்த கமல், ஏவிவிடப்பட்ட சிலர்தான் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டார். நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது, அவரது குணாதிசயத்தைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.
சூலூரில் நாங்கள் பிரச்சாரம் செய்யத் தடை செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அங்குப் பதற்றம் இருக்கிறது என்றால், ஏன் சூலூரில் தேர்தலைத் தள்ளி வைக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார் கமல்.
[கமல் கோட்சே பிரச்சினையைத் தொடர்வது ஏன்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/28)
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/93)
**
.
**
[கேக் வெட்டிய விஜய்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/87)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/26)
**
.
**
[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/45)
**
.
.
�,”