எனது ராஜதந்திரத்தால் திமுக தோல்வியடைந்தது-வைகோ!

public

சட்டமன்ற தோல்விக்குப்பிறகு மதிமுக தொடர்ந்து செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திவருகிறது. அந்தவகையில், திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வாளாடியில் நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசும்போது, ”என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜதந்திரத்தால்தான் ஆட்சியமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்கமுடியாது. எனது ராஜதந்திரமே திமுக தோல்விக்குக் காரணம்.

இந்த நிமிடம்வரை நமது இயக்கத்தை அழிக்க நினைத்து நிர்வாகிகளை இழுத்து வருகிறார்கள். நம்மை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து போய்விட்டார்கள். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள், உங்களுக்காக நான் இருக்கிறேன். இதுதான், நமது இயக்கத்தின் பிணைப்பு. நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களைக் கைவிடமாட்டேன்.

தேர்தலில் வெற்றி, தோல்விகள் வரலாம், போகலாம். ஆனால், ஆட்சி அதிகாரம், பதவிகள் எதுவும் இல்லாதபோதும் மக்களுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம் மதிமுக மட்டும்தான்.

தேர்தல் அரசியலில் மட்டுமில்லாமல், மக்கள் போராட்டங்கள் என பலவற்றில் இதுவரை விலைபோகாத இயக்கம் தமிழகத்தில் உள்ளது என்றால் அது மதிமுக மட்டும்தான்!.

வருகிற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாம் பாடுபடுவோம். வெற்றி கிடைக்காவிட்டாலும் காத்திருப்போம். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பணத்துக்கு அடிபணிய மாட்டார்கள். சேவை செய்பவர்களைத்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் கலந்தாலோசித்து எந்தெந்த பதவிகளில் போட்டியிடுவதும் என முடிவு செய்யப்படும் என்றார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *