‘சொந்த ஊரான மதுரையிலோ, தனது மனைவி பிரேமலதாவின் ஊரிலோ, தான் வசிக்கும் சென்னை மதுரவாயலிலோ அவரால் போட்டியிடமுடியவில்லை. சினிமா மோகத்தில் உளுந்தூர்ப்பேட்டை மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிவிடலாம் என நினைக்கிறார். அவருடைய எண்ணத்தை தவிடு பொடியாக்குவேன் நான்’ என்கிறார் விஜயகாந்துக்கு எதிராக களமிரங்கியிருக்கும் பாமக வேட்பாளர் பாலு.
“‘கடந்த பத்து ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து ஒன்றும் சாதிக்கவில்லை விஜயகாந்த். சட்டசபை எதிர்கட்சி தலைவராக இருந்து, மொத்தமாக 29 நாட்கள் தான் சட்டசபைக்கே சென்றுள்ளார். 1 மணி நேரம் 1 நிமிடம் தான் பேசியுள்ளார். அதே நேரத்தில் நான் மக்களுக்கான பல போராட்டங்களை நடத்தியுள்ளேன். அதன் பலனாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 600 க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன. சமச்சீர் கல்வியை தமிழகத்தில் போராடி அமல்படுத்தியுள்ளேன். எங்கள் மருத்துவர் அய்யா போட்டுக்கொடுத்த திட்டங்கள் உள்ளன. கட்டாயம் வெற்றிப் பெறுவேன். எங்கள் அன்புமணி முதல்வராக தமிழகத்தில் ஆட்சியமைப்பார்’ என்கிறார்.
�,