சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை சென்னை தீவுத்திடலில் நேற்று தொடங்கிய ஜெயலலிதா சென்னை மாநகராட்சியில் உள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம், செய்து வைத்துப் பேசுகையில், “ அதிமுக ஆட்சிக்காலம் பெண்களின் பொற்காலம். உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் ரூ.50 ஆயிரம். அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம், விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் என எண்ணற்ற நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். சென்னை மாநகராட்சியில் உள்ள 21 தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டால்கூட இந்தப் பொதுக்கூட்டம் போதாது. 5 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டால் எதிரிகள் மூர்ச்சையடைந்து விழுந்து விடுவார்கள். நீங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பீர்கள் என்றார்.�,
எதிரிகள் மூர்ச்சையடைந்து விழுந்து விடுவார்கள்: ஜெ பெருமிதம்
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel